‛‛பயிற்சியுடன் பணி’’.. அனுபவம் வேண்டாம்.. பிசிஏ, பிஎஸ்சி முடித்தவர்களை அழைக்கும் டிசிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் சார்பில் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பயிற்சியுடன் வேலை என்பது வழங்கப்பட உள்ளது.

நம் நாட்டில் செயல்படும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ். இந்த நிறுவனத்தில் தொடர்ச்சியாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

it jobs job jobs

அந்த வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் TCS B.Sc Ignite & Smart Hiring Batch - 2024 என்ற பெயரில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி, B.Voc பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதில் பிஎஸ்சி என்றால் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், டேட்டா சயின்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, எலக்ட்ரானிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, பயோ கெமிஸ்ட்ரி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களும், B.Voc என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதோடு விண்ணப்பம் செய்வோர் இந்த படிப்பை 2024ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இன்ஜினியரிங் முடித்தவர்களால் பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியாது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து தேர்வில் தேர்ச்சியடைவோருக்கு டிசிஎஸ் சார்பில் பயிற்சி என்பது வழங்கப்படும். சாப்ட்வேர் என்ஜினியரிங் பணிக்கான பயிற்சிகள் கூட வழங்கப்படும்.

தற்போதைய அறிவிப்பின்படி Cloud, Blockchain, AR/VR/XR, AI/ML/GenAI, robotics, Digital Engineering உள்ளிட்டவை சொல்லி தரப்படும். அதோடு கிராசூவேட் என்ஜினியரிங் டீமுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி உயர்படிப்புக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். அதாவது இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழங்களில் PG டிகிரி முடிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இவை அனைத்தும் Ignite முறையில் பணியில் சேர விரும்புவோருக்கு கிடைக்கும்.

அதேவேளையில் TCS Smart Hiring முறையில் பணியில் சேர விரும்புவோருக்கு டெக்னோ ஃபக்சனல் ரோல் பணி வழங்கப்படும். இன்ஜினியரிங், குவாலிட்டி அசூரன்ஸ், டே்டா அனலிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்படுவார்கள். அதுதொடர்பான டெக்னிக்கல் ஸ்கில்ஸ் சார்ந்த பயிற்சி என்பது வழங்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 10ம் தேதிக்குள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு சென்று விண்ணப்பம் செய்து கொள்ளலாம். . இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு அக்டோபர் 15ம் தேதி தேர்வு என்பது நடத்தப்படும். தேர்வு ஆன்லைனில் நடக்காது. தேர்வு மையங்களில் வைத்து தேர்வு என்பது நடத்தப்படும். தேர்வு என்பது 2 மணிநேரம் இருக்கும். இந்த தேர்வில் Numerical Ability, Verbal Ability, Reasoning Ability, Coding (Optional) அடிப்படையில் கேள்விகள் என்பது இருக்கும்.

மேலும் இந்த பணியிடங்கள் First Come First Serve முறையில் நிரப்பப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் முதலில் விண்ணப்பம் செய்வோருக்கு மட்டுமே அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்கும். தாமதமாக விண்ணப்பம் செய்யும்போது அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்காமல் தூரத்தில் உள்ள தேர்வு மையம் கிடைக்கும் நிலை உருவாகலாம்.

மேலும் தேர்வு மையத்தை ஒருமுறை தேர்வு செய்தால் மாற்றம் செய்ய முடியாது. இதனால் கவனமுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வது தொடர்பான முழுவிபரம் கீழே உள்ள லிங்க் மூலம் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+