TCS ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னை, பெங்களூர், கொச்சி உள்பட 5 இடங்களில் நியமனம்
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், கொச்சி, புனே, இந்தூர் உள்ளிட்ட 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:

இந்த ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்எஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இந்த படிப்புகளை முழு நேரமாக கல்லூரி சென்று படித்திருக்க வேண்டும்.
மேலும் ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பிரிவில் குறைந்தபட்சம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர React, Node Js, Redux, Express.Js அல்லது Next Js உள்ளிட்டவற்றை ஸ்கில்செட்டாக கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகாவில் பெங்களூரு, மகாராஷ்டிராவில் புனே, மத்திய பிரதேசத்தில் இந்தூர், கேரளாவில் கொச்சி என 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையில் கூட பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications