பழனி திருக்கோயிலுக்கு சொந்தமான கல்லூரியில் வேலை.. நேரடி இன்டர்வியூ மட்டுமே.. நல்ல சம்பளம்
பழனி: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் (பெண்கள் மட்டும்) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகம் கலைக்கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறது. இந்த கல்லூரியில் பணியாற்ற ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் (பெண்கள் மட்டும்) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆங்கிலம் -2
கணிணி அறிவியல் -3
கணிதம் -2
வேதியியல் -2
வணிகவியல் -1 (தமிழ்வழிக்கல்வி)
பொருளியல் -2
இயற்பியல் -2
தாவரவியல்-2
ஆகிய ஆசிரியர் பணியிடங்களுக்கு வரும் ஜூலை 27 தேதி காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை walk in interview நடைபெறும்.
கல்வி தகுதி: ஆசிரியர் பணியிடங்களுக்கு phd (அல்லது) NET/SLET/SET ஆகிய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: கணிணி அறிவியல் பாடப்பிரிவிற்கு phd (or) NET/SLET/SET ஆகிய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வராத பட்சத்தில் முதுநிலை பொறியியல் (ME computer science) கல்வித் தகுதி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரக்குறிப்பினை www.apaccwomen.ac.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து நேர்காணலுக்கு வரும் போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்டர்வியூ நடைபெறும் இடம்: அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி.திண்டுக்கல் மாவட்டம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications