அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை.. நாகையில் பணியிடம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு
சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார். டெட் பேப்பர் 2இல் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் கட்டுப்பாட்டில் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு கீழ்கண்டவாறு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது:-

காலிப்பணியிட எண்ணிக்கை:
அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலுத்துறை உயர்நிலைப்பள்ளி, வெட்டியக்காடு, வேதாரண்யம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் ஆகும்.
ஆங்கிலம் - 01
அறிவியல் 01
கல்வித் தகுதி:
ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். (இல்லையெனில்) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம், நாகப்பட்டினம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் அறிவுப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யப்படும். 24.06.2025 நாள் முதல் 25.06.2025 நாள் வரையில் தேர்வு செய்யப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆசிரியர் காலிப்பணியிடங்களை நாகப்பட்டினம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை அணுகி தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ நாகப்பட்டினம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 24.06.2025 மாலை 5.00 க்குள் விண்ணப்பித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications