ஆசிரியர் தகுதித் தேர்வு டெட் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுக்க செல்லும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: டெட் என்று அழைக்கப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் வாழ்நாள் முழுக்க செல்லும், மீண்டும் இதில் மறுமதிப்பீட்டு முறைகள் நடத்தப்படாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் பெறப்படும் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 7 ஆண்டுகள் முடிந்த பின் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் அல்லது மறுமதிப்பீட்டு முறை மூலம் சான்றிதழை நீட்டிக்க வேண்டும்.

இதில் மொத்தம் இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகவும், 2ம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராகவும் பணிக்கு சேர முடியும். இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் வாழ்நாள் முழுக்க செல்லும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
7 ஆண்டுகள் என்று இல்லாமல் இனி வாழ்நாள் முழுக்க டெட் சான்றிதழை பயன்படுத்த முடியும். இதற்காக தனியாக சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் கிடையாது. இனிமேல் மீண்டும் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் கிடையாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில்தான் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டில் டெட் தேர்வு எழுதியவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுக்க செல்லும் என்று அறிவித்துள்ளது.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications