சூப்பர்..வங்கி வேலை உங்கள் கனவா? அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஐபிபிஎஸ்..! கால அவகாசம் நீட்டிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, யூகோ பேங்க், இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 665 எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்தியா முழுவதும் எச்டிஎப்சி, ஆக்சிஸ் உள்ளிட்ட தனியார் வங்கிகளோடு 12 பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது.

bank jobs

அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா பேங்க், இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூகோ பேங்க் உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது.

தேர்வு அறிவிப்பு: இந்த வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஐபிபிஎஸ் நடத்தும் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி தவிர்த்த 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பொதுத் துறை வங்கிகளில் பொருத்தவரைக்கும் 2025 2026 ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த வங்கிகள்: இப்போது வெளியாகியிருக்கும் அறிவிப்பின்படி பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் ,பஞ்சாப் அண்டு சிந்து பேங்க், யூகோ பேங்க், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கு கிளர்க் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற இருக்கிறது. தேர்வ்வில் வெற்றி பெறுபவர்கள் இந்த வங்கிகளில் ஒன்றில் பணியமர்த்தப்படுவர்.

பணியிடங்கள்: இந்தியா முழுவதும், 6 ஆயிரத்து 128 இடங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் மொத்தம் உள்ள 665 இடங்களில் பொது பிரிவினருக்கு 285 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 57 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 177 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு மூன்று இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 143 இடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தகுதிகள் என்னென்ன?: இந்தத் தேர்வில் பங்கேற்க இந்தியா, நேபால், பூட்டான் குடிமக்களாக இருக்க வேண்டும் .தீபெத் அகதியாக இருப்பவர்கள் அதற்கான சான்றிதழ்கள் வைத்திருக்கும் போது விண்ணப்பிக்க முடியும். 20 முதல் 28 வயது உள்ள இந்திய குடிமக்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 1996 ஜூலை இரண்டாம் தேதிக்கு பிறகு பிறந்தவர்களும் 2004 ஜூலை ஒன்றாம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப கட்டணம்: எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 175 ரூபாயும், மற்றவர்களுக்கு 850 தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?: www.ipbs.in என்ற தளத்தில் CRP CLERKS லிங்கை க்ளிக் செய்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

முக்கிய நாட்கள்: இணையதளத்தில் பதிவு செய்ததும் தகுதியான நபர்களுக்கு தேர்வு அழைப்பு அனுப்பப்படும்.. அதனைத் தொடர்ந்து பிரிமிலனரி, மெயின் தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெற உள்ளது, முதல் நிலை தேர்வு ஆகஸ்ட் மாதமும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு அக்டோபர் மாதமும் நடைபெற உள்ளது. இந்த இரு தேர்வுகளையும் ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நிலை தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் அதற்குப் பிறகு முதன்மை தேர்வு நடைபெற்று தகுதியான விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த இணையதளத்தில் இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அந்த தேதிக்குள் விண்ணப்பத்தில் மாற்றங்கள் ஏதும் இருந்தாலும் செய்து கொள்ளலாம். மேலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 28 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+