ஜாக்பாட்.. தூத்துக்குடியில் சூப்பர் வேலை! டிகிரி, டிப்ளமோ, தமிழ் தெரிந்தவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் டெக்னிக்கல் ஆபிசர், அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர், பிசியோதெரபிஸ்ட் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. டிகிரி, டிப்ளமோ படித்தவர்களும், தமிழில் எழுத படிக்க, தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: டெக்னிக்கல் அசிஸ்டெ்னட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி அல்லது எம்எஸ்சி பிரிவில் மைக்ரோபயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, லைப் சயின்ஸ், அல்லது பிடெக்கில் பயோ டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பிஎஸ்சி முடித்தவர்கள் என்றால் 5 ஆண்டு அனுபமும், எம்எஸ்சி, எம்டெக் முடித்தவர்கள் என்றால் 2 ஆண்டு அனுபமும் கொண்டிருக்க வேண்டும்.
அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட்: ப்ரோகிராம் கம் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். டிகிரி முடித்து எம்எஸ் ஆபிஸ் தெரிந்திருந்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல் இன்ட்ரக்டர் (காதுகோளாதவருக்கு)பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிப்ளமோ பிரிவில் Training young deaf and hearing handicapped படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பிசியோதெரபிஸ்ட்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளங்கலை பிரிவில் பிசியோதெரபிஸ்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆடியோமெட்ரிக் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிப்ளமோ பிரிவில் DHLS படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வேன் கிளீனர்: வேன்கிளீனர் பணிக்கு இருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும். இந்த பணிக்கான வயது வரம்பு மற்றும் சம்பள விபரம் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: இவை அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் thoothukudi.nic.in இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு செப்டம்பர் 14ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications