திருச்செந்தூர் கோயிலில் வேலை.. லட்சத்தில் சம்பளம்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள உலக புகழ் பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் பல்வேறு காலிபணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. உதவி பொறியாளர், இளநிலை மின் பொறியாளர் மற்றும் உதவியாளர் உள்பட மொத்தம் 11 பணியிடங்களை நிரப்ப கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முக்கியமான தகுதி என்னவென்றால், இந்து சமயத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.02.2024க்குள் கண்டிப்பாக நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி மூலம் அடுத்த ஆறு மாதத்தில் 10000 பேர் தேர்வு.. தமிழக அரசு மேஜர் குட்நியூஸ்
மொத்த பணியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: திருச்செந்தூர் முருகன் கோவில்
வேலை தரும் நிறுவனம்: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை
பணி வாரியாக காலி பணியிடங்களின் விவரங்களை பார்ப்போம்.
கட்டிடப் பொறியாளர்: காலியிடம் 1
கல்வித் தகுதி : கட்டிடப் பொறியியலில் (B.E Civil) இளநிலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்
மாத சம்பளம் : ரூ. 36,700 – 1,16,200
இளநிலை மின் பொறியாளர்: காலியிடங்களின் எண்ணிக்கை- 6
கல்வித் தகுதி : மின் பொறியியலில் பட்டயப்படிப்பு (Diploma in EEE) படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் : ரூ. 35,900 – 1,13,500
மடப்பள்ளி: காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது அவசியம் வேண்டும். கோயிலின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மாத சம்பளம் : ரூ. 11,600 – 36,800,
திருவலகு: காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : தொகுப்பூதியமாக மாதம் ரூ. 6,000 வழங்கப்படும்.
வயதுத் தகுதி : பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.01.2024 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
திருச்செந்தூர் கோவில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை : திருச்செந்தூர் கோவில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ இன்றைக்குள் அனுப்ப வேண்டும்.
முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி. - 628215
விண்ணப்பிக்க இன்று தான் கடைசி தேதி : 14.02.2024. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களை https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் சென்று பாருங்கள்.












Click it and Unblock the Notifications