நல்ல வாய்ப்பு.. திருவள்ளுர் மாவட்ட சுகாதாரத்துறையில் சூப்பர் வேலை.. தேதி முடியப்போகுது

Subscribe to Oneindia Tamil

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்ட சுகாதாரத்துறையில் தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் மாதம் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 8 ம் வகுப்பு முடித்து தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் ஐடிஐ, டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம்.

திருவள்ளுர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட சுகாதார நல சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய ஊரக நலவாழ்வு குழும மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

Tiruvallur Health Society Recruitment 2024 for 19 post including Data Entry Operator


ரெஃப்ரிஜிரெஷன் மெக்கானிக்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஐடிஐயில் ரெஃப்ரிஜிரெஷன் மெக்கானிக் அண்ட் ஏர் கண்டிஷனிங் படிப்பை முடித்து 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பம் செய்லயாம். மாத சம்பளமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: உதவியாளர் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 35 வயதுக்குள் இருக்கும் டிகிரி முடித்த கம்ப்யூட்டர் அறிவு பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.44 ஆயிரம் வரை.. சென்னையிலேயே சூப்பர் வேலை.. அழைக்கும் சிபிசிஎல்!


லேப் டெக்னீசியன்: லேப் டெக்னீசியன் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். டிஎம்எல்டி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.13 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் டிஸ்பென்சர்ஸ் (மருந்து வழங்குநர்) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். டி.பார்ம் முடித்து 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தினசரி சம்பளமாக ரூ.750 வழங்கப்படும்.

ஆபிஸ் அசிஸ்டென்ட்: ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். 10ம் வகுப்பு 40 வயதுக்குள் இருப்பவர் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மல்டி பர்பஸ் வொர்க்கர் பணிக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8 ம் வகுப்பு முடித்த 40 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் தினம் ரூ.300 சம்பளத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

மாதசம்பளம் ரூ.62,000 முதல் ரூ.2.25 லட்சம்.. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ரெடியா?


விண்ணப்பிப்பது எப்படி: இந்த பணி என்பது முற்றிலும் தற்காலிகமானது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https//tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரில் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்பலாம்.

விண்ணப்பங்களை ‛நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுலகம், 54/5 ஆசூரி தெரு, திருவள்ளுர் மாவட்டம் - 602 001, தொலைபேசி 044-27661562 என்ற முகவரிக்கு பிப்ரவரி 19ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+