காலையிலேயே ஹேப்பி நியூஸ்! கைநிறைய சம்பளம்.. கூட்டுறவுத் துறையில் வேலை! வெளியானது அரசின் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் ஏராளமான காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும் அவற்றை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டுறவு வங்கியில் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறை மூலமாக கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இவற்றின் மூலம் விவசாய கடன், தொழில் கடன், அவசர தேவைக்கு கடன் என பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் நகைக்கடன் உள்ளிட்ட சேவைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவில் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளை காலிப் பணியிடங்கள் ஏராளமாக இருப்பதாகவும் அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

காலி பணியிடங்களால் மக்களுக்கு உரிய சேவை செய்ய முடியவில்லை, பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கூட்டுறவு சங்க பதிவாளர், மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கே.நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்," கூட்டுறவு வங்கிகள், அனைத்து வகையான மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்களில் (பணியாளர் மற்றும் மாணவர் கூட்டுறவு பண்டக சாலைகள் தவிர) நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய உதவியாளர் காலி பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் தேர்வு செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அந்த வகையில், கீழ்க்கண்ட காலவரையறையை பின்பற்றி பணி நியமன பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக நாளிதழ்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி பணி நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற வேண்டும்.
அவற்றை பரிசீலித்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். செப்டம்பர் 12 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்று, அக்டோபர் 27 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். நவம்பர் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தி, இறுதி முடிவுகளை நவம்பர் 15 ஆம் தேதி வெளியிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலியாக உள்ள 2000 உதவியாளர் பணியிடங்களுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. 29ஆம் தேதி வரை இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு 12ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறுகிறது. அக்டோபர் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். நவம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தி இறுதி முடிவு நவம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும்" என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications