சொந்த ஊரில் அரசு வேலை.. மாதம் 50 ஆயிரம் சம்பளம்.. ஊராட்சி செயலர் பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழகம் முழுக்க மாவட்ட வாரியாக ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்ட வாரியாக எத்தனை பணியிடங்கள் நிரப்பப்படுகிறது என்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை தமிழக அரசு அளித்த நிலையில், மாவட்ட வாரியாக ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி உள்ளிட்டவை குறித்து பார்க்கலாம்.

மாவட்ட வாரியான காலியிடங்கள் விவரம்:
அரியலூர் - 33
செங்கல்பட்டு - 52
கோவை - 14
கடலூர் - 37
தருமபுரி - 21
திண்டுக்கல் - 39
ஈரோடு - 26
கள்ளக்குறிச்சி - 33
காஞ்சிபுரம் - 55
கன்னியாகுமரி - 30
கரூர் - 32
கிருஷ்ணகிரி - 50
மதுரை - 69
மயிலாடுதுறை - 31
நாகப்பட்டினம் - 18
நாமக்கல் - 33
பெரம்பலூர் - 16
புதுக்கோட்டை - 83
ராமநாதபுரம் - 17
ராணிப்பேட்டை - 31
சேலம் - 54
சிவகங்கை - 51
தென்காசி - 36
தஞ்சாவூர் - 91
தேனி - 20
நீலகிரி - 09
தூத்துக்குடி - 31
திருச்சிராப்பள்ளி - 72
திருநெல்வேலி - 24
திருப்பத்தூர் - 24
திருப்பூர் - 19
திருவள்ளூர் - 88
திருவண்ணாமலை - 69
திருவாரூர் - 38
வேலூர் - 26
விழுப்புரம் - 60
விருதுநகர் - 50
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறுவது அவசியம். 8 ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்து இருப்பது அவசியம்.
வயது வரம்பு:
பொதுப்பிரிவு: 18 வயது முதல் 32 வயது வரை
MBC/BC/BCM/DC விண்ணப்பதாரர்களுக்கு: 18 முதல் 34 வயது வரை
SC/SCA/ST/ஆதரவற்ற விதவை விண்ணப்பதாரர்களுக்கு: 18 முதல் 37 வயது வரை
மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு: 18 முதல் 42 ஆண்டுகள் வரை
சம்பளம் எவ்வளவு?
ரூ.15,900 - 50,400/- வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வரும் 09.11.2025 - கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here












Click it and Unblock the Notifications