கோவையில் தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. நல்ல வேலைக்கு போகனுமா.. நாளை நேர்காணல்
கோவை: கோவையில் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.. இங்கு பணியாற்ற விரும்புவோர்.. எங்கு எந்த மாதிரியான வேலைகள் காலியாக உள்ளது என்பதை அறிய முடியாது. இந்நிலையியில் கோவையில் நல்ல வேலையில் சேர விரும்புவோருக்கு நாளை வாய்ப்பு உருவாகி உள்ளது. நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இன்றைய இளைஞர்கள் பலர் அரசு வேலையில் சேர்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.. அரசு வேலையிலும், மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சேரவும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் ஆயிரம் பேர் வேலைக்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் போட்டியிடுவார்கள். எனவே அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை..

அதேநேரம் தனியார்துறையில் அரசு நிறுவனங்களில் உள்ளது போன்று சம்பளத்துடன் வேலைகள் இருக்கின்றன. ஏன் அரசு துறைகளைவிட அதிக சம்பளம் பெறக்கூடிய வாய்ப்புகள் ஐடி, ஆட்டோ மொபைல், டிசைனிங், ஓட்டல், தொழிற்சாலை தொழில்கள் என ஏராளமான தனியார் துறை வேலைகள் இருக்கின்றன, நன்றாக வேலை செய்யதெரிந்த, அதேநேரம் வாடிக்கையாளர்கள் கவரக்கூடிய பேச்சுத்திறமை உள்ளவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து தனியார் நிறுவனங்கள் ரெடியாக உள்ளன.
இனிமையாக பேசக்கூடியவர்கள், அசாத்தியமான தொழில்நுட்ப திறமை உள்ளவர்கள், குறிப்பிட்ட துறைகளில் நன்கு நிபுணத்துவம் உள்ளவர்களுக்கு கோவை பகுதியில் அதிக கிராக்கி உள்ளது. நல்ல ஊதியத்துடன் வேலைகள் உள்ளன. இந்நிலையில் தனியார் துறைகிளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்டம் தோறும் வேலைவாய்பு முகாம்களை அரசே ஏற்பாடு செய்கின்றன.
இந்த முகாம்களில் என்ன சிறப்பு என்றால், ஏராளமான வேலைகளுக்கு திறமையான பணியாளர்களை தேடி பிரபலமான பல நிறுவனங்கங்கள் பங்கேற்கும். எனவே தகுதி உள்ளவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அதுவும் அரசே தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதால் தாரளமாக நேர்காணலில் பங்கேற்கலாம். கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு மூலம் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடக்கிறது. முகாமிற்கு 10, பிளஸ்-2, பட்டப்படிப்பு, டிப்ளமோ பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகள் நகல்களுடன் கலந்துகொண்டு வேலை வாய்ப்பு பெறலாம்.
இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உடனே பணி ஆணை வழங்கப்படும். பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. முகாமில் பங்கேற்க விரும்புவர்கள் www.tnprivateJobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்" இவ்வாறு கோவை கலெக்டர் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications