வெளிநாடுகளில் ஏகப்பட்ட வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க அழைக்கும் அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
சென்னை: வெளிநாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அதன் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்திற்கு மீண்டும் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. மீண்டும் வெளிநாடுகளில் இந்தியர்கள் முக்கியமாக தமிழர்கள் பலர் வேலைக்கு சேர தொடங்கி உள்ளனர். கொரோனா காலத்திற்கு முன்பு இருந்தது போல கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சரியாகி வருகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக புதிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை
இது தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு முதல்வரின் அறிவுரைபடியும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரின் வழிகாட்டுதல் படியும் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என முனைவர். சி.ந.மகேஸ்வரன் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு
இதை தொடர்ந்து வெளிநாட்டில் பணி அமர்த்த பல்வேறு நாடுகளின் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை தொடர்பு கொண்டதில் தற்போது கீழ்கண்ட பணியிடங்களுக்கு தேவைப்பட்டியல் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்1 இங்கிலாந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாத ஊதியம்
ரூ.2,00,000 முதல் ரூ.2,50,000/- வரை சம்பளம் பெறுமானம் உள்ள (டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண்) 300 முதல் 500 செவிலியர்கள்
தேவைப்படுகிறார்கள்.
2. பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயது முதல் 43 வயதுக்குட்பட்ட GCC
ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு குவைத் நாட்டில் பணிபுரிய தேவைப்பட்டியல் வந்துள்ளது. மாத ஊதியமாக ரூ.27,000/-முதல் ரூ.34,500/
வரை வழங்கப்படும்.
3. அரபு உணவு வகைகள் சமைக்க ஆண் சமையல்காரர்கள் தேவை பட்டியல் பெறப்பட்டுள்ளது. சமையலருக்கு மாத ஊதியம் ரூ.37,000/- வழங்கப்படும்.
4. குவைத்நாட்டில் வீட்டில் வேலை செய்ய 30 வயது முதல் 40 வயது வரை பெண் பணியாளர்கள் தேவை பட்டியல் பெறப்பட்டுள்ளது. மாத ஊதியம்
ரூ.29,640 - முதல் ரூ.32,000/- வரை வழங்கப்படும்.
5, Diploma in Mechanical Engineer/ITI Fitter தேர்ச்சி பெற்ற 22 வயது முதல்
35 வயதிற்குட்பட்ட Casting/Inspection/Machine-operator கள் (Automobile Foundry) பணிபுரிய ஓமன்நாட்டிற்கு தேவை பட்டியல் வந்துள்ளது. மாதஊதியம் ரூ.29,000/- வழங்கப்படும்.
மேற்படி சம்பளம் சேர்க்காமல் பணியாளர்களுக்கு உணவு, இருப்பிடம் விமானப்பயணச்சீட்டு, ஆகியவைகள் அந்நாட்டின் வேலையளிப்பவரால் தனியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான Ocnianpower.com-ல் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும். எனவே வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புவோர் இந்நிறுவன வலைதளத்தில் தங்கள் விபரங்களை பதிவிட்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஊதியம்
மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது (044-22505886/22502267). மேற்காணும் வேலைவாய்ப்பு விவரங்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டடுள்ளது என்றும் முனைவர் சி. ந. மகேஸ்வரன் இ.ஆ.ப, அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.com-ல் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எத்தனை
மேலும் தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் சுரண்டல்களிலிருந்து வெளிநாட்டு வேலைநாடுநர்களை பாதுகாக்கவும் மற்றும் குறைந்த செலவில் பணியமர்த்துவதற்காகவும் 1978-ம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் வெளிநாட்டு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு சான்றிதழ் சான்றொப்பம், விசா பெறுவதற்கு உதவிபுரிதல் மற்றும் வெளிநாடு செல்வதற்கு தேவையான பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை செய்துவருகிறது. இந்நிறுவனம் இதுவரை 10,350 நபர்களை பல்வேறு வெளிநாட்டு வேலைகளில் பணியமர்த்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவைப்படும் மனிதவளத்தினை அளிப்பதற்கும் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கு இந்நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது என்றும் முனைவர் சி. ந. மகேஸ்வரன் இ.ஆ.ப அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார், என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications