நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை.. தஞ்சாவூர் இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. 8, 12 ஆம் வகுப்பு தகுதி தான்
சென்னை: தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பருவகால உதவியாளர் மற்றும் பருவகால காவலர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, சம்பளம் எவ்வளவு வழங்கப்படும் உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலியாக உள்ள 240 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால உதவியாளர் (ஆண்/பெண்) மற்றும் பருவகால காவலர் (ஆண்கள் மட்டும்) ஆகிய பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
* பருவகால உதவியாளர்: 120
* பருவகால காவலர்: 120
கல்வி தகுதி:
* பருவகால உதவியாளர் பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* பருவகால காவலர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.
வயது வரம்பு:
வயது வரம்பைப் பொறுத்தவரை 01.11.2025 தேதிப்படி 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். BC/MBC, BCM பிரிவினருக்கு 34 வயது வரையும், SC/ST பிரிவினருக்கு 37 வயது வரையும் தளர்வுகள் உண்டு. பருவகால காவலர் பணிக்கு 32 வயது வரையுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். BC/MBC/BCM பிரிவினர் 34 வயது வரையும், SC/ST, SC(A) பிரிவினருக்கு 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். அடிப்படை ஊதியம்: ரூ.5,218/-, அகவிலைப்படி (DA): ரூ.3,499/-. போக்குவரத்துப்படி: பணிபுரியும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/- வீதம் வழங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், எண்.1, சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர்-613001 என்ற முகவரியில் அலுவலக நாட்களில் நேரடியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 28.11.2025 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்க இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே, தகுதியுள்ள தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications