பழனி கோயிலுக்கு மூட்டை மூட்டையாக குவிந்த விண்ணப்பங்கள்.. 296 பணியிடங்களுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள்
பழனி: முருகனின் அறுபடை வீடான பழனி கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், சுகாதார மேஸ்திரி என 296 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி, என்ஜினியர் ஆகிய படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. 296 பணியிடங்களுக்கு சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்ப மனுக்கள் மூட்டை மூட்டையாக தேவஸ்தான அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
முருகனின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடு என்று அழைக்கப்படுவது பழனி முருகன் கோவில். இந்த கோயிலில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. எழுத்து தேர்வு எதுவும் இன்றி நேர்முகத்தேர்வு அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வு அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், சுகாதார மேஸ்திரி (மலைக்கோவில்), சுகாதார மேஸ்திரி (அனைத்து உப நிறுவனங்கள்), சுகாதார மேஸ்திரி (அனைத்து உப கோயில்கள்), பூஜை / காவல் (உபக்கோயில்), காவல் (உபக்கோயில் மற்றும் உப நிறுவனங்கள், துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்) துப்புரவு பணியாளர் (உப கோயில்கள் மற்றும் உப நிறுவனங்கள்), கால்நடை பராமரிப்பு, உதவி யானை மாவுத்தர், சுகாதார ஆய்வாளர், உதவி பொறியாளர் (மின்னணுவியல்), உதவி பொறியாளர் (சிவில்), இளநிலை பொறியாளர் என மொத்தம் 296 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது.
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி, என்ஜினியர் ஆகிய படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. நேரடியாகவும் தபால் மூலமாகவும் கோவில் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்றுடன் விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில், இந்த பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து இருந்தது தெரியவந்துள்ளது.
அறநிலையத்துறை வேலை என்பதால் கை நிறைய சம்பளம், சலுகைகள் குறைந்த கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு கூட பட்டதாரிகள், முதுகலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பித்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 296 பணியிடங்களுக்கு சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்ப மனுக்கள் மூட்டை மூட்டையாக தேவஸ்தான அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவை பரிசீலனை செய்யப்பட்டு எந்த தேதிகளில் நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications