எழுத படிக்க தெரிந்தால் போதும்.. 58 ஆயிரம் சம்பளம்! கோவை வன பத்ரகாளியம்மன் கோயிலில் வேலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு கோயில்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் 17 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் 58 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவையில் உள்ள வன்பத்ரகாளி அம்மன் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

tnhrce-recruitment-jobs-in-kovai-vanabadrakali-amman-temple-17-vacancy-apply-immediately

பணியிடங்கள் விவரம்:

சீட்டு விற்பனையாளர்: 01
காவலர்: 02
கூர்க்கா: 01
ஏவலர்: 01
சலவை தொழிலாளர்: 01

திருவலகு: 03
பெருக்குபவர்: 05
உப கோயில் எழுத்தர்: 01
ஓதுவார்: 01
உபகோயில் மேளம் குழு: 01

கல்வி தகுதி:

* சீட்டு விற்பனையாளர், உப கோயில் எழுத்தர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும்.
* காவலர், கூர்கா, ஏவலர், சலவை தொழிலாளர், திருவலகு, பெருக்குபவர், ஓதுவார் ஆகிய பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.

* உபகோயில் மேளம் குழு: தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட இசைத்துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் எவ்வளவு?

சீட்டு விற்பனையாளர்: ரூ.18,000 - 58,600 வரை
காவலர்: ரூ.15,900 - 50,400 வரை
கூர்க்கா: ரூ.15,900 - 50,400 வரை
ஏவலர்: ரூ.10,000 - 31,500 வரை
சலவை தொழிலாளர்: ரூ.11,600 - 36,800

திருவலகு: ரூ.15,900 - 50,400 வரை
பெருக்குபவர்: ரூ.10,000 - 31,500 வரை
உப கோயில் எழுத்தர்: ரூ.15,700- 50,000 வரை:
ஓதுவார்: ரூ.18,500- 58,600 வரை
உபகோயில் மேளம் குழு: 15,700 - 50,000 வரை

வயது வரம்பு:

* விண்ணப்பதாரர்கள் 01.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
* இந்து மதத்தை சேர்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
*விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

* நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
* இதர நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்கள் அலுவலக வேலை நாட்களில் நேரங்களிலே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
* விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, இதர நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நாட்களில் அலுவலக நேரங்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள் மிகு வனபத்ரகாளியம்மன் கோயில்,
தேக்கம்ப்பட்டி, நெல்லித்துறை அஞ்சல்,
மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம், 641 301

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+