அரசு போக்குவரத்து கழகம், மின் வாரியத்தில் 1,910 பணியிடங்கள்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு! தூள் கிளப்புங்க
சென்னை: அரசு போக்குவரத்து கழகம், மின் வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மொத்தம் 1,910 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை)-க்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணபிக்கலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள சில பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படுகிறது. தற்போது குரூப் 4 தேர்வுக்கான விண்னப்பங்கள் முடிந்து விரைவில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் பெரிதும் எதிர்பர்த்த குரூப் 4 தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளில் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

மற்றொரு பக்கம் புதிய தேர்வு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், ஐடிஐ, டிப்ளமோ கல்வி தகுதி கொண்ட பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கு யாரெல்லம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் டெக்னிக்கல் அஸ்சிஸ்டன்ட், ஹாஸ்டல் சூப்பிரண்ட், சர்வேயர், ஜூனியர் டிரெய்னிங் ஆபிசர், ஜூனியர் டிரேட்ஸ்மேன் (தமிழக அரசு போகுவரத்து கழகம்), வெல்டர், ஃபிட்டர், டீசல் மெக்கானிக், டெக்னிக்கல் அஸிசிஸ்டண்ட் (மின் துறை) என 58 வகையான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 1,910 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் மட்டும் தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் 656 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
கல்வி தகுதி:
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். சர்வேயர் பணிக்கு சிவில் என்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.
வெல்டர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். அப்ரெண்டீஸ் பயிற்சியும் முடித்து இருப்பது அவசியம். தேர்வர்கள் கல்வி தகுதி மற்றும் பணியிடங்கள் பற்றிய விரிவான மற்றும் முழு விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்க அவகாசம்:
மேற்கூறிய பணியிடங்களுக்கு ஜூலை 12 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கணினி வழி தேர்வுகள் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 மற்றும் செப்டம்பர் 11 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும், அரசுத் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து காலிப்பணியிடங்கள் அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க; https://tnpsc.gov.in/Document/tamil/CTS%20-%20Diploma,%202025%20Final%20Tamil_.pdf
தமிழக அரசு அறிவிப்பு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்) உள்ளிட்ட 58 பதவிகளுக்கான 1910 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை)-க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (13.06.2025) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் 13.06.2025 முதல் 1207.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். OMR/கணினி வழித் தேர்வு முறையில் 31,082025, 07.09.2025 மற்றும் 1109.2025 முதல் 15.09.2025 வரை நடைபெறும்.
பணியிடங்கள் அதிகரிக்கப்படும்
தொடர்ச்சியாக 12-வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) 2024-ம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதியாண்டுகளுக்கான 2022 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 1011 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கையோடு ஒப்பிடும் போது, 2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025. 2026) 1910 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மேலும், 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை / நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில், கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications