அரசு வேலை வேண்டுமா? சூப்பர் சான்ஸ்! 861 பணியிடங்கள் காலி! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பரபரப்பு தகவல்
சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சர்வேயர் போன்ற 861 காலிபயிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசில் பல்வேறு துறையில் காலியாக உள்ள பணிகள் எல்லாம் டிஎன்பிஎஸ்சி எனும் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மோட்டார் வாகன ஆய்வாளர், சிறப்பு மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்பட 861 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

ஜூலை 1 ஆம் தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 க்குள்ளும் அதே பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்குள்ளும், முன்னாள் ராணுவதத்தினர் 50-க்குள்ளும் பொது பிரிவினரைத் தவிர இதர பிரிவினர்களான எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் ஆதரவற்ற விதைகளுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ்மொழித் திறன் தேர்வு மற்றும் பணிக்குரிய முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ் மொழித் திறனாய்வுத் தேர்வு 9.11.2024 அன்று நடைபெறும்.
முதன்மைத் தேர்வு 11.11.2024 முதல் 14.11.2024 வரை நடைபெறும். உதவி சோதனையாளர் பதிவக்கு 2 காலியிடங்களும் உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்)- 3 காலிப்பணியிடங்களும் திட்ட உதவியாளர் நிலை II- 3 காலிப்பணியிடங்களும் மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேட் 2 பணிக்கு 45 இடங்களும் வரைவாளர் நிலை 2 பணிக்கு 183 இடங்களும் விடுதிக் கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் 2 காலியிடங்களும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் 2, சிறப்பு பணி பார்வையாளர் 22, அளவர் 15, தொழில்நுட்பவியலாளர் 79 என காலிப்பணியிடங்கள் உள்ளன.
சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ, மூன்றாண்டு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். ஜூலை 1 ஆம் தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், அதே பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 க்குள்ளும் பொது பிரிவினரைத் தவிர இதர பிரிவினர்களான எஸ்.சி., எஸ்.டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் ஆதரவற்ற விதைகளுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழித் திறன் தேர்வு மற்றும் பணிக்குரிய முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ் மொழிக்கான எழுத்து திறனாய்வுத் தேர்வு 9.11.2024 ஆம் தேதியும் முதன்மைத் தேர்வு 11.11.2024 முதல் நவம்பர் 14 ஆம் தேதி தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவகாரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ 100 ஆகும். இதை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 11.9.2024.
-
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications