தமிழக அரசு வேலை.. டிஎன்பிஎஸ்சி குட்நியூஸ்.. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (ஆகஸ்ட் 30ம் தேதி) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (நேர்முகத் தேர்வு கொண்ட பணிக்கான)தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 105 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் நிரப்பப்பட உள்ள நிலையில், இதற்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி 2026 ஜனவரிக்குள் 18 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப தயாராகி வருகிறது. டிஎன்பிஎஸ்சி தலைவராக பிரபாகர் ஐஏஎஸ் பொறுப்பேற்ற பிறகு பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி 105 இடங்கள் உள்ள புதிதாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (நேர்முகத் தேர்வு கொண்ட பணிக்கான)தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் அல்லது எம்பிஏ மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள்

jobs tnpsc job

மொத்த காலிபணியிடங்கள்: 105
வேலை வகை: அரசு வேலை
வேலை தரும் நிறுவனம்: தமிழ்நாடு அரசு
கல்வி தகுதி: பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் அல்லது எம்பிஏ மற்றும் அனுபவம்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்று நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வுகள் இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் கட்டாய தமிழ் தகுதித் தேர்வு ஆகும். பொது அறிவு, மனத் திறன் அறிவு குறித்த வினாக்கள் இடம் பெறும். இரண்டாம் தாளில், பாடம் தொடர்பான வினாக்கள் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு பின்னர் பணி வழங்கப்படும்.

தேர்வு கட்டணம் எவ்வளவு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வுக்கான கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களுக்கு வரும் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அக்டோபர் 2 முதல் 4 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியான இன்று முதலே, விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை www.tnpsc.gov.in தளத்தில் அறியலாம்,.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அசிஸ்டெண்ட் டெஸ்டர், எம்.வி.ஐ., ஸ்பெஷல் ஓவர்சீயர், ஜூனியர் டிராட்டிங் ஆபீசர், சர்வேயர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், எக்ஸிகியூட்டிவ், டெக்னீஷியன் உள்ளிட்ட மொத்தம் 861 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பச் சேவைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 11ஆம் தேதிக்கு முன்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இந்த பணியிடங்களுக்கும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ் தகுதித் தேர்வு, பொதுப் படிப்பு மற்றும் திறன் மற்றும் மன திறன் தேர்வு உள்ளிட்ட பாடங்களுக்குத் தேர்வு நடைபெறும். ஒவ்வொரு பணிக்கும் ஒரு கல்வித்தகுதி உள்ளது. உதாரணமாக வரைவாளர் தரம்-III பணிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட நகரம் மற்றும் கிராமப்புறத் திட்டமிடலில் போஸ்ட் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். அல்லது சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி வாரியத்தால் வழங்கப்படும் கட்டிடக்கலை உதவியாளர் டிப்ளமோ அல்லது அதற்கு இணையான சிவில் இன்ஜினியரிங் துறையில் மூன்றாண்டுகளுக்குக் குறையாத அனுபவம் பெற்றிருப்பது அவசியம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+