ஆஹா செம ஆஃபர்! மாசம் சொளையா ரூ 2 லட்சம் வரை சம்பளம்.. தமிழக அரசில் பணி.. விண்ணப்பிக்க நாளை கடைசி
சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டி தேர்வு மூலம் மாதம் ரூ 2 லட்சம் வரை ஊதியம் பெற தமிழ்நாடு அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அவ்வப்போது போட்டித் தேர்வுகளை நடத்தி அரசு பணிகளுக்கு ஆட்களை நியமித்து வருகிறது. இந்த தேர்வாணையத்திற்கு தற்போது வரை தற்காலிக தலைவர் மட்டுமே இருக்கிறார். இன்னமும் நிரந்தர தகவலை நியமிக்கவில்லை.
எனினும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அரசு பணிகளில் சேர இந்த போட்டித் தேர்வுகள்தான் பிரதானம். இதில் தேர்வு அடைந்தால் மட்டுமே அரசு பணியாளராக முடியும். அந்த வகையில் தற்போது புதிய தேர்வை தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பொதுப் பணித் துறை
அதன்படி தமிழ்நாடு பொதுப் பணி துறையில் உள்ள சுற்றுலா அலுவலர் பதவிக்கான நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளைதான் கடைசி நாள்.

3 பணியிடங்கள் காலி
சுற்றுலா அலுவலர் பணிக்கு மொத்தம் 3 பணியிடங்கள் உள்ளன. இதற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயணம் அல்லது சுற்றுலா துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுற்றுலா துறையில் முதுகலை அல்லது எம்பில் படித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

டிப்ளமோ படித்தவர்கள்
சுற்றுலா பிரிவில் டிப்ளமோ படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி படிப்புகளில் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு பட்டபடிப்பு படித்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

பட்டியலினத்தவர்
பட்டியலின அல்லது பழங்குடியினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை, மற்றவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். இந்த 32 வயதிற்கு மேல் இருக்கக் கூடாது. ஊதியம் என பார்த்தால் ரூ 2 லட்சம் வரை கிடைக்கும். மாதம் ரூ 56,100 முதல் ரூ 2,05,700 வரை ஊதியமாக வழங்கப்படும். நிரந்தர பதிவுக் கட்டணம் ரூ 150, எழுத்துத் தேர்வுக்கு ரூ 200 ஆகும்.

ஆதிதிராவிடர்
இதில ஆதிதிராவிடர் அல்லது அருந்ததியினர், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமியரல்லாத பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர் ஆகியோர் மூன்று முறை மட்டுமே கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிப்பது எப்படி
இந்த பணியிடத்திற்கான தேர்வு மையம் சென்னையில் இருக்கும். இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு நேர்காணல் , வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து www.tnpscexams.in, www,tnpsc.gov.in ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிக்கையின் முழு விவரத்திற்கு https://tnpsc.gov.in/Document/english/03_2023_TO_ENG.pdf-என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

இணையவழி விண்ணப்பம்
இணைய வழி விண்ணப்பத்தில் கூறும் அனைத்து தகவல்களுக்கும் விண்ணப்பதாரரே முழு பொறுப்பு. விண்ணப்பதாரர் தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் தவறு ஏற்படின் தாங்கள் விண்ணப்பித்த இணையச்சேவை மையங்களையோ பொதுச் சேவை மையங்களையோ குற்றம்சாட்டக் கூடாது. விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர் சரிபார்க்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications