இதெல்லாம் வேற லெவல் யோசனை.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிகப்பெரிய அறிவிப்பு.. உடனே நோட் பண்ணுங்க
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளை மனதில் வைத்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் அரசுப் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் தேர்வாக வேண்டும் என்பதை மையமாக வைத்து இந்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆண்டுதோறும் 200 பேருக்கு உணவு இதன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தங்கும் விடுதியுடன் சிறப்பு பயிற்சி வழங்க ₹12.90 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள எஸ்.ஐ. காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடினமான தேர்வு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதிய பலர் இந்த முறை தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும்.. இதற்கு முன் இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு போல இது இல்லை என்றும் கூறியுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II.இல் (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது நடந்தது.
மாற்றம்: கடந்த சில நாட்களுக்கு முன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடந்தது. இந்த நிலையில் இனி டிஎன்பிஎஸ்சி தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தாள் திருத்தம் இரண்டு விதமாக நடக்கின்றன. ஓஎம்ஆர் தாள்களில் சரியான விடையை குறிப்பிடும் தேர்வுகளுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் முதன்மை தேர்வுகளில்தான் பிரச்சனை உள்ளது. இதில் கேள்விகளுக்கு விடைகளை எழுத வேண்டும்.
ஆனால் இதை திருத்துபவர்கள் படித்து பார்த்து திருத்துவது இல்லை என்று புகார்கள் உள்ளன. அதாவது சரியாக படிக்காமல் இதை திருத்துபவர்கள் மதிப்பெண் வழங்குகிறார்கள் என்று புகார் உள்ளது. இல்லையென்றால் திருத்த நீண்ட காலம் எடுக்கிறது.
இதை சரி செய்யவே இப்போது மென்பொருள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்டு அப்லோட் செய்யப்படும்.
தனி தனியாக பாடவாரியாக பிரித்து அவை மென்பொருளில் அப்லோட் செய்யப்படும்.
அதற்கு அருகிலேயே விடைத்தாள் இருக்கும். இதை பார்த்து திருத்துபவர்கள் விடைகளை திருத்தலாம். இதில் ஒவ்வொரு பதிலையும் படிக்க ஒரு குறிப்பிட்ட நேரம் வழங்கப்படும்.
அந்த நேரத்திற்கு முன்பாக விடையை திருத்தவே முடியாது. அந்த நேரம் வரை முழுமையாக விடையை படிக்க வேண்டும். அதற்கு முன் விடையை திருத்த சாப்டவேர் அனுமதிக்காது.
இவை எல்லாம் ஜி.ஐ.எஸ்.(GIS) அமைப்பு மூலம் கண்காணிக்கப்படும்.
இது போக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறை தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளிகள் அரசு பணியார்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது, என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications