சட்டப்படிப்பை முடித்தவரா நீங்கள்? சிவில் நீதிபதியாக சூப்பர் வாய்ப்பு.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சட்டப்படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கும் மாதம் குறைந்தபட்சம் ரூ.27,700 முதல் அதிகபட்சமாக ரூ.44,770 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளுக்கு தேவையான ஆட்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தான் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெறுவோர், அரசு வழக்கறிஞராக இருப்போர், புதிதாக சட்டப்படிப்பை முடித்தவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இதில் வழக்கறிஞராக பயிற்சி பெறுவோர், அல்லது அரசு வழக்கறிஞராக இருப்போர் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் குறைந்தபட்சம் 25 வயதும், அதிகபட்சம் 42 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மற்றவர்கள் என்றால் அதிகபட்சமாக 37 வயதுக்குள் இருக்க வேண்டும். புதிதாக சட்டப்படிப்பை முடித்தவர்கள் என்றால் யாராக இருந்தாலும் அவர்களின் குறைந்தபட்ச வயது 22 ஆகவும், அதிகபட்சம் 29 வயதாகவும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளியாக இருந்தால் 10 வயது வரை தளர்வு வழங்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.27,700 முதல் அதிகபட்சமாக ரூ.40,450 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜூலை 5ம் தேதி மதியம் 12 மணி முதல் ஜூலை 7 ம் தேதி மதியம் 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்போருக்கு ஒருமுறை பதிவு கட்டணமாக ரூ.150 உள்ளது. அதன்பிறகு முதல்நிலை தேர்வு கட்டணமாக ரூ.100ம், மெயின் தேர்வுக்கான கட்டணமாக ரூ.200ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த பெண்களுக்கு தேர்வு கட்டணம் என்பது கிடையாது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி முதல்நிலை தேர்வு (Preliminary Exam) ஆகஸ்ட் 19ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கும். அதன்பிறகு மெயின் தேர்வு 4 பிரிவுகளாக நடக்கும். மொழிமாற்றத்துக்கான தேர்வு அக்டோபர் 28 ம் தேதி காலை 9 மணிக்கும், சட்டம் தொடர்பான தேர்வு - I அன்றைய தினம் மதியம் 2 மணிக்கும் நடக்கும்.
அதன்பிறகு சட்டம் தொடர்பான தேர்வு - II அக்டோபர் 29ம் தேதி காலை 9 மணிக்கும், சட்டம் தொடர்பான தேர்வு III என்பது அன்றைய தினம் மதியம் 2 மணிக்கும் தொடங்கி நடக்கும். ஒவ்வொரு தேர்வும் 3 மணிநேரம் நடக்கும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விபரங்களை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications