குரூப் 2, 2ஏ தேர்வு எழுதியவரா நீங்கள்? TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ரிசல்ட் எப்போது தெரியுமா?
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வின் முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டு காலியாக உள்ள துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப் 2 பதவிகளுக்கு 507 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதே போல உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு குரூப்பு 2 ஏ பதவிகளில் சுமார் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 2327 காலி பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டிருந்தது. குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலை தேர்வுகள் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்வர்கள் பலரும் ஆர்வத்துடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை கடைசி நாள் எனவும் அறிவித்திருந்தது. இதேபோல ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தேர்வர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தை அளித்த நிலையில், அவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.
இதனையடுத்து எடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2700 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்த நிலையில், 5.81 தேர்வர்கள் தேர்வெழுதினர். தொடர்ந்து தேர்வுக்கான விடைக்குறிப்பும் டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தேர்வர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வின் முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. ஏற்கனவே நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications