Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரூப் 2, 2ஏ எழுதியிருக்கீங்களா.. டிஎன்பிஎஸ்சி சொன்ன குட்நியூஸ்.. கூடுதல் காலி பணியிடங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தில் குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5,860 ஆக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

TNPSC Group 2 Exam: Group 2, 2A posts increase to 5,860 says TNPSC

இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.

தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023-ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

தொகுதி-II முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், மேலும், ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிறதேர்வுகள் நடத்தவேண்டியிருந்ததாலும், தொகுதி-II முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023-இல் வெளியிடப்படுவதாக ஏற்கெனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவணை (Tentative Result Declaration Schedule) குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகள் டிசம்பர் 16ஆம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. முன்னதாக, முதல்நிலைத் தேர்வை தேர்வர்கள் 2022 மே மாதத்தில் எழுதிய நிலையில், 1.6 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 டிசம்பரில் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதில் நியாயமே இல்லை. இவ்வளவு தாமதம் ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் தாமதம் குறித்து, தேர்வர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கினர். குரூப் 2 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

தேர்வு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், தொகுதி II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதியில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி II தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தில் குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5,240 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த எண்ணிக்கையுடன் புதிதாக 620 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 5,860 ஆக அதிகரித்துள்ளது.

சென்ற புதன்கிழமை 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 2024ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. மொத்தம் 19 வகையான தேர்வுகளை நடத்த இருப்பதாக அட்டவணை மூலம் தெரியவந்துள்ளது.

குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2024 ஜனவரியில் வெளியிடப்படும் என்றும் தேர்வு ஜூன் மாதம் நடந்தப்படும் என்றும் தெரிகிறது. குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையை டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ள இருக்கிறது. இத்துடன் சட்டம், தொல்லியல், உடற்கல்வி, நூலகம், கணக்கியல் மற்றும் சிவில் நீதிபதி தேர்வுகளும் அட்டவணையில் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+