டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு திருச்சியில் தித்திப்பான செய்தி.. திங்கள்கிழமை ரொம்ப முக்கியமான நாள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2 மாதிரி தேர்வு நாளை மறுநாள் நடைபெறும் என வட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 20ம் தேதி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் குறித்து அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் "தமிழ்நாட்டின் அரசு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

jobs 2

இதேபோல் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2ஏ பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஒட்டு மொத்தமாக குரூப் 2, குரூப் 2 ஏவில் 2,327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 14.9.2024 அன்று நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 19ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கனோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வனவர் பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் உடற்திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மை என இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதல்நிலை தேர்வினை கொள்குறி வகையில் (Objective Type) நடத்தப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, தேர்ச்சி அடைபவர்களுக்கு முதன்மை தேர்வு குரூப் 2 மற்றும் 2ஏ-வும் தனிதனியாக நடத்தப்பட உள்ளது.

குரூப் 2 தேர்வு தமிழ்மொழி தகுதி தாள் மற்றும் பொது அறிவு தாள் என இரண்டு தாள்களுடன் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. தமிழ் மொழி தாள் பத்தாம் வகுப்பு தரத்திலும், பொது அறிவு தாள் பட்டப்படிப்பு தரத்திலும் நடத்தப்பட உள்ளது. குரூப் 2ஏ தேர்வு என்பது முதன்மை தேர்வு தமிழ் மொழி தகுதி தாள் மற்றும் பொது அறிவு, பொது நுண்ணறிவும் பகுத்தறிதலும், மொழிப்பாடம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். தமிழ் மொழி தகுதி தாள் பத்தாம் வகுப்பு தரத்தில் நடத்தப்பட உள்ளது.

இரண்டாம் தாள், பொது அறிவு தாள் 50 % டிகிரி தரத்திலும், 20% பத்தாம் வகுப்பு தரத்திலும், மொழி பிரிவு 30% பத்தாம் வகுப்பு தரத்திலும் (Objective)முறையில் நடத்தப்பட உள்ளது.. இந்த தேர்வுகளில் ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து பின்னர் ஷீட்டில் அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை தேர்வு செய்ய கூடாது. அப்படி குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். அதாவது மாற்றி சரியான விடையை கொடுத்தாலும் அதை டிஎன்பிஎஸ்சி இந்த முறை ஏற்றுக்கொள்ளாது. ஓஎம்ஆர் ஷீட்டில் எது சரியான விடையோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். இதுதான் தற்போது மாறி உள்ள நடைமுறையாகும்..

திருச்சி மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலெட்சுமி வெளியிட்ட அறிவிப்பில், "திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2 மற்றும் 2ஏ (டி.என்.பி.எஸ்.சி.குரூப்-2, 2ஏ) ) போட்டி தேர்வுக்கான மாதிரித்தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. மாதிரி தேர்வை தொடர்ந்து திருப்புதல் வகுப்பு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

வகுப்பில் கலந்து கொள்பவர்கள் குறிப்பெடுப்பதற்கு அவசியம் நோட்டு கொண்டு வர வேண்டும். மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர்.விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும். மாதிரி தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு, குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண்களை அதிகப்படுத்துவதற்கு அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயார் செய்யும் மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்று பயன்பெறலாம்" இந்த தகவலை மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+