விஏஓ பணிக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எக்ஸாம்.. தேர்வர்களே ரெடியா இருங்க! சீக்கிரமே வருது சர்ப்ரைஸ்
சென்னை: ஆண்டு கால அட்டவணைப்படி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 4 தேர்வை பொறுத்தவரை விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது.
தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்புகிறது. ஆண்டு தோறும் கால அட்டவணையை வெளியிட்டு அதற்கு ஏற்றார்போல் தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்படும். தேர்வர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் இந்த நடைமுறையை டிஎன்பிஎஸ்சி கடந்த சில ஆண்டுகளாக ஆண்டு அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை
அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது. அதன்படி குரூப் 1 தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக உத்தேச ஆண்டுத் திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. டிஎன்பிஎஸ்சி ஆண்டு கால அட்டவணைப்படி, குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ளது. 70 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 1 பணியிடங்கள்
துணை ஆட்சியர் - 28, துணை காவல் கண்காணிப்பாளர் - 07, உதவி ஆணையர் -19, உதவி இயக்குநர் ஊரக வளர்ச்சி - 07, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் - 03, உதவி ஆணையர் - 06 என மொத்தம் 70 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க வரும் 30 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு கால அட்டவணைப்படி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 4 தேர்வை பொறுத்தவரை விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது.
எப்போது அறிவிப்பு வரும்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தேர்வு அறிவிப்பாக குரூப் 4 தேர்வே உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட இந்த பணியிடங்களுக்கு டிகிரி முதல் முதுகலை பட்டம், ஏன் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் கூட விண்ணப்பிக்கிறார்கள் என்றால் மிகையல்ல. அந்த அளவுக்கு குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவும்.
பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு குரூப் 4 தேர்வுக்காக ஆண்டுக் கணக்கில் தேர்வர்கள் பலரும் தயாராகி வருகிறார்கள். பயிற்சி மையங்களிலும் வீட்டில் இருந்தபடியும், வேலைக்கு சென்று கொண்டு என பல ஆயிரக்கணக்கான தேர்வர்கள் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை ஆவலுடன் எதிபார்த்து உள்ளார்கள்.
குரூப் 4 தேர்வில் எதிர்பார்க்கப்படும் பதவிகள்:
கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியளர், பால் அளவையாளர், வனக் காப்பாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 4 தேர்வில் இடம்பெறுகிறது.
தமிழ்நாடு அமைச்சுப் பணி, மகளிர் மேம்பாட்டு நிறுவனம், குடிநீர் வடிகால் வாரியம், சிறு தொழில் கழகம், பாடநூல் மற்று கல்வியியல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கீழ் இயங்கும் அமைப்புகளில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
தேர்வு முறை:
குரூப் 4 தேர்வு கொள்குறி வகையிலான கேள்விகள் இடம் பெற்று இருக்கும். மொத்தம் 200 கேள்விகள் இடம் பெற்று இருக்கும். கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடைபெறும். சில ஆயிரம் பணியிடங்களுக்கே பல லட்சம் தேர்வர்கள் தேர்வினை எழுதுவார்கள் என்பதால் கட் ஆப் என்பது மிக அதிகமாக இருகும்.
கிட்டதட்ட 250 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே வாய்ப்பு இருக்கலாம் என சொல்லும் அளவுக்கு கட் ஆஃப் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 8,932 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த பணியிடத்திற்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications