TNPSC Group 4: இணையவழியில் பெறப்படாத சான்றிதழை பதிவேற்றம் செய்யலாமா? டிஎன்பிஎஸ்சி கொடுத்த விளக்கம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. சொன்னது போலவே டிஎன்பிஎஸ்சி 3 மாதத்திற்குள் ரிசல்ட்டை வெளியிட்டது. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது தொடங்க உள்ளது. இதில் இணையவழியில் பெறப்படாத சான்றிதழை பதிவேற்றம் செய்யலாமா என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் டிஎன்பிஎஸ்சி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதனை இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை 22ஆம் தேதி வெளியிட்டது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 4.... ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்தபடி 3 மாதத்திற்குள் வெளியிட்டு சாதனை படைத்தது. டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்பு தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்த கட்ட பணிகளில் டிஎன்பிஎஸ்சி முழு வேகத்தில் இறங்கியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நேற்று வெளியானது.
ஜூனியர் அசிஸ்டண்ட், டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோடைப்பிஸ்ட் பதவிகளுக்கு இடஒதுக்கீடு மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தகுதியானவர்களின் பதிவு எண்கள் இடம்பெற்ற பட்டியல் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள் அடுத்த கட்டமாக கணினி வழித் திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு (Onscreen Certificate Verification) சான்றிதழ்களை அப்லோடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 29.10.2025 முதல் 07.11.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சான்றிதழ்களை உரிய நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள், தேர்வின் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தேர்வர்களின் சில முக்கியமான சந்தேகங்களுக்கு தெளிவு ஏற்படுத்தும் விதமாக டிஎன்பிஎஸ்சி சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
* தேர்வர்கள் இணையவழியில் பெறப்பட்ட தமிழ் வழியில் கல்வி பயின்றோர் சான்றிதழை பதிவேற்றம் செய்யலாமா?
தேர்வர்கள் இணையவழியில் பெறப்பட்ட தமிழ் வழியில் கல்வி பயின்றோர் சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம்.
* தேர்வர்கள் இணையவழியில் பெறப்படாத வகுப்புச் சான்றிதழை பதிவேற்றம் செய்யலாமா?
தேர்வர்கள் இணையவழியில் பெறப்படாத வகுப்புச் சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம்.
* மாவட்ட பிரிவிற்கு முன் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பெற்ற வகுப்புச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படுமா?
மாவட்ட பிரிவிற்கு முன் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பெற்ற வகுப்புச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
* தேர்வர்கள் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்த பெயருக்கும், பத்தாம் வகுப்புச் சான்றிதழ் / பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ் / பட்டயம் / பட்டப்படிப்பு சான்றிதழில் உள்ள பெயருக்கும் எழுத்துப் பிழை, பெயரில் எழுத்துக்களுக்கு இடையே இடைவெளி (spacing), தலைப்பெழுத்து (initial) ஆகியவற்றில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் அதற்குரிய விளக்கத்தினை ஒரு உறுதிமொழியாக (undertaking) கணினி வழித் திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* தேர்வர்கள் பத்தாம் வகுப்புச் சான்றிதழ் / பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ் / பட்டயம் / பட்டப்படிப்பு சான்றிதழை பெற்றபின் பெயர் மாற்றம் செய்து இருந்தால், அந்த நிலைமையில் கணினி வழித் திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அரசிதழில் வெளியான அறிவிக்கை (Government Gazette) அல்லது உரிய நீதிமன்ற ஆணையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications