குரூப் 4 தேர்வு.. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உயருகிறது? தேர்வர்களுக்கு விரைவில் ஸ்வீட் நியூஸ்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 2-வது வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுவதால் தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது குரூப் 4 பணியிடங்கள் 6,724 ஆக உள்ளது.
தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. ஆண்டு தோறும் கால அட்டவணை வெளியிட்டு குரூப் 1 முதல் 4 வரை பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது குரூப் 4 தேர்வுதான்.

பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட இந்த குரூப் 4 தேர்வில் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் அரசு பணிக்காக காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்கள் இந்த குரூப் 4 தேர்வு அறிவிப்பினை எதிர்பார்த்து உள்ளனர். பத்தாம் வகுப்பு கல்வி தகுதி தான் என்றாலும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அப்ளை செய்வதுண்டு.
அவற்றில் சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வானது ஜூன் மாதம் 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஜனவரி 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. ஜூன் மாதம் 8ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.
இந்த நிலையில் இந்த மாத துவக்கத்தில் குரூப் 4 பணியிடங்களில் 480 காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டது. இந்த புதிய அறிவிப்பின் மூலம் மொத்தமுள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6,244 லிருந்து 6,724 ஆக உயர்ந்து. இந்த நிலையில் தான் குரூப் 4 பணியிடங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தேர்வர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினரும் கோரிக்கைகள் வைத்து வந்தனர். இந்த நிலையில், குரூப் 4 காலிப்பணியிடங்கள் மேலும் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு அக்டோபர் 2-வது வாரத்தில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. குரூப் 4 பணியிடங்கள் உயர்த்தப்படலாம் என வெளியாகியிருக்கும் தகவல்கள் தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அக்டோபரில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையும் உயர்த்தப்படலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது தேர்வர்கள் மத்தியில் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. குரூப் 4 தேர்வில் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications