குரூப் 4 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. இப்படி ஒரு தீபாவளி பரிசே கிடைக்காது ! வெளியானது ரிசல்ட்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 4 பணிகளுக்கான தேர்வை நடத்தியது. லட்சக்கணக்கானோர் தேர்வை எழுதிய நிலையில் தற்போது இத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. குறைந்த கால இடைவெளியில் தேர்வு முடிவுகள் வெளியாவது இதுவே முதல்முறை என்கின்றனர்.

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

tnpsc tamil nadu jobs 4

அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர் , இளநிலை நிர்வாகி, வனக் காவலாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் காலியாக உள்ளது.

அவற்றில் சுமார் 6244 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வானது ஜூன் மாதம் 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஜனவரி 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. ஜூன் மாதம் 8ஆம் தேதி ஒன்பதரை மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வுகள் நடைபெற்றது.

மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் நிலையில் ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுத் தாள்களை திருத்தும் பணியானது தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வினை எழுதி இருக்கும் நிலையில் மிக அதிக போட்டி இருக்கும். இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் ஏற்கனவே 6224 காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலம் மொத்தமுள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6224 லிருந்து 6744 ஆக உயர்ந்தது. பின்னர் 2,208 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 8,932 இடங்களாக அதிகரித்தது.

இந்த நிலையில் தேர்வர்கள் தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான விடைக் குறிப்புகள் ஜூன் 18ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in, tnpscexams.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

இன்று சென்னையில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிந்து மூன்று மாதங்களில் முடிவுகள் வெளியாவது இதுவே முதல் முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+