டிஎன்பிஎஸ்சி குரூப் 4: ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் இத்தனை லட்சமா? ரிசல்ட் எப்போது? வெளியான தகவல்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும், குரூப் 4 ரிசல்ட் எப்போது வெளியிடப்படுகிறது என்ற தகவலையும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில், 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதுவார்கள். இதனால், பெரிய திருவிழா போன்றே இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3,
தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30-ந் தேதி வெளியிட்டது.
10 ஆம் வகுப்பு கல்வி தகுதி என்றாலும் முதுகலை படித்தவர்கள், என்ஜினியர்கள் என பலரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதினார்கள். இதனால் இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் ஆனது. குரூப் 4 தேர்வு நேற்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு பணி, கண்காணிப்பாளர்கள், நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படையினர், வீடியோ கிராபர்கள், கண்காணிப்பு கேமரா பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பகுதி 1-ல் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. பகுதி 2-ல் பிரிவில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்கள் என 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.வினாக்கள் அனைத்தும் கொள்குறி ' வடிவில் இடம் பெற்றிருந்தது.
ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதினர். சுமார் 4 லட்சம் பேர் குரூப் 4 தேர்வில் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இதன்படி குரூப்-4-ல் ஒரு பதவிக்கு 320 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் 'கட்-ஆப்' மதிப்பெண்கள் உயரும் என தேர்வர்கள் கூறினர்.
குரூப்-4 தேர்வுக்கான முடிவுகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட தமிழ்நடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பையும், அதனைத்தொடர்ந்து கவுன்சிலிங்கையும் நடத்த டிஎன்பிஸ்சி ஆயத்தமாகி வருகிறதாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications