TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என TNPSC தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 10,000 பேரும், நடப்பாண்டில் தற்போது வரை 11,000க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. சென்னையில் 311 மையங்கள் உள்பட தமிழ்நாட்டில் 492 மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

குரூப் 4 தேர்வு
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட 3,935 பணி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
இதற்காக, கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதற்கட்டமாக எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணி முதல் நடைபெறும் இந்தத் தேர்வு 12.30 மணிக்கு நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 314 மையங்களில் இன்று தேர்வு நடந்து வருகிறது. இந்த போட்டித் தேர்வை ஆண்கள், 5,26,553 பேர், பெண்கள் 8,63,068 பேர், 117 மூன்றாம் பாலினித்தவர்கள் என 13,89,738 பேர் எழுதுகின்றனர்.
TNPSC தலைவர் பேட்டி
இந்நிலையில், இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கான கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு என்பதால் அதிகமான தேர்வர்கள் எழுதுகின்றனர்.
ரேங்க் லிஸ்ட் போட்ட பிறகு மெரிட் - இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கப்படும். அரசியல் சார்ந்த சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்கக்கூடாது என வினாத்தாள் தயார் செய்யும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தி இருந்தோம். வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும்.
3 மாதங்களில் ரிசல்ட்
குரூப் 4 தேர்வு முடிவுகள் அதிகபட்சமாக 3 மாதத்தில் வெளியிடப்படும். கடந்த முறை 4 - 5 மாதங்கள் ஆகின. இந்த முறை பணிகளை வேகப்படுத்தி உள்ளோம். ஒரு மாதத்திற்குள் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து விடும். அதன் பிறகு இட ஒதுக்கீடு அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் போட்டு, கவுன்சிலிங்குக்கு அழைப்போம். இறுதி ரிசல்ட் போட்டு பணி வழங்க 3 மாதங்கள் ஆகிவிடும்.
தேர்வுத்தாள் தயார் செய்து ரகசியமாக கொண்டு செல்ல வேண்டிய நிலை, மதுரையில் மட்டும் ஒருசில பிரச்சனைகள் இருந்தது, மற்ற இடங்களில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் பரிசோதித்த பின் அனுப்பப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் கடந்தாண்டு 10,721 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 11,027 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4,300 பேர் தேர்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தமாக சுமார் 10,000 பேர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வரும் வாரம் 15 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும். இந்த ஆண்டு அட்டவணைப் படி தேர்வுகளை நடத்தி விட்டோம். குரூப் 2 ஏ தேர்வு அறிவிப்பு வெளியிட்டவுடன் நடைபெறும். OMR பேப்பரை திருத்துவதற்கு 6 evolution lab வைத்துள்ளோம். இந்த பேப்பரை கம்ப்யூட்டர் தான் திருத்தப் போகிறது.
மாறுபட்ட பதில்கள் இருந்தால் தேர்வர்கள் அதனை கோரலாம். விடைத்தாள் ஒரு மாதத்திற்குள் திருத்தப்படும். ஆனால் முடிவு வெளியாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகலாம். பேப்பர் ஒரு மாதத்தில் திருத்தப்பட்டாலும் ரிசர்வேஷன் முறைப்படி ரேங்கிங் போட்டு கவுன்சிலிங் அழைக்க வேண்டும். எனவே முடிவுகள் வழியாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகலாம். OMR simplified செய்ததால் திருத்துவதற்கு எளிமையாக இருக்கும்.
கடந்த ஆண்டுகளில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் இந்த தேர்வு நடத்தப்பட்டு வந்தது. தற்போது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதனால் தான் இந்த எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இன்னும் மூன்று மாதங்கள் வரை எந்த துறையில் காலி பணியிடங்கள் வந்தாலும் அதையும் சேர்த்துக் கொண்டு, இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை கொண்டு நிரப்புவோம்.
தேர்வுகளுக்கு தயார் செய்யப்படும் வினாக்களை யாராலும் பார்க்க முடியாது. அதை தயாரிக்கும் குழு மட்டும்தான் பார்க்க முடியும். சர்ச்சைக்குள்ளாகும் கேள்விகள், அரசியல் கேள்விகள் போன்ற கேள்விகளை கேட்கக்கூடாது என வினாக்கள் தயாரிக்கும் குழுக்களுக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications