அதிரடி! ஆவின் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்படும்.. 322 காலியிடங்களுக்கு அழைப்பு

மேலாளர், துணை மேலாளர், தொழிநுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவின் நிறுவனத்தில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலாளர், துணை மேலாளர், தொழிநுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது.

அரசு வேலை பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் கனவு. அந்த கனவு நனவாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுத வேண்டும். குரூப் 1, குரூப் 2, குரூப் 4, விஏஒ உள்ளிட்ட பல தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே அதற்கான பணிகளில் சேர முடியும்.

TNPSC has announced 322 vacancies in Aavin

தமிழக அரசுக்கு சொந்தமான பால் நிறுவனமான ஆவின் என்பது பால் கொள்முதல் பதப்படுத்துதல் குளிரூட்டல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை செய்து வரும் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதற்கான பணியிடங்களுக்கும் மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பணியிடங்களுக்கும் தமிழர்களுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் சட்டசபையில் இது குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மனு தாக்கல் செய்தார்.

மேலும் ஆவின் பணிக்கான ஆட்சேர்க்கையும் அரசுக்கு சொந்தமான சட்டப்பூர்வமான வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், மேலும் மாநில அரசுக்கு கீழ் உள்ள அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கையும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இவரது கோரிக்கை சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதற்கு அரசு தரப்பில் இருந்து ரூ.3,19,65000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC has announced 322 vacancies in Aavin

இதை தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் பணிகளின் ஆட்சேர்க்கையும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஓப்படைக்கப்பட்டு இதற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்காக முன்பணமாக 97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வு விதிமுறைகள் இப்பணி தேர்வுகளுக்கும் விதிக்கப்பட்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆவின்,போக்குவரத்து மற்றும் அரசுக்கு கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மேலாளர், துணை மேலாளர், தொழிநுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+