குரூப் 4 தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ்..கூடுதல் காலி பணியிடங்களை சேர்த்த டிஎன்பிஎஸ்சி! ரிசல்ட் எப்போ?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. 6244 பணியிடங்களுக்காக தேர்வு நடைபெற்ற நிலையில் அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அத்தேர்வுகளுக்கு கூடுதல் காலிப் பணியிடங்களை இணைத்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

tnpsc tamil nadu 4


அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர் , இளநிலை நிர்வாகி, வனக் காவலாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் காலியாக உள்ளது.

அவற்றில் சுமார் 6244 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வானது ஜூன் மாதம் 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஜனவரி 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. ஜூன் மாதம் 8ஆம் தேதி ஒன்பதரை மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வுகள் நடைபெற்றறது.

மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் நிலையில் ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுத் தாள்களை திருத்தும் பணியானது தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அதாவது அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த தேர்வில் தேர்ச்சிக்காக,பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 146-151 ஆக இருக்கும் எனவும், பொதுப் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 152 - 155ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர பிற்படுத்தப் பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவலை வெளியிட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் ஏற்கனவே 6224 காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலம் மொத்தமுள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6224 லிருந்து 6744 ஆக உயர்ந்திருக்கிறது. அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கட் ஆப் மதிப்பெண்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வினை எழுதி இருக்கும் நிலையில் மிக அதிக போட்டி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+