குரூப் 2, 2ஏ தேர்வு எழுத போறீங்களா? அவசியம் இதை பாருங்க! தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கு 2 வாரமே உள்ள நிலையில், தேர்வர்களுக்கு தேர்வின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை வீடியோவாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிட்டு போட்டி தேர்வுகள் மூலமாக ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. 6,244 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான தேர்வுகள் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது.

tnpsc job employment

மேலும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி, 1சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் ஜூலை 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் தான், 2,030 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது. அதன்பிறகு குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 14 ல் நடைபெறுகிறது.

உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதேபோல, மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2ஏ பணியிடங்கள் என மொத்தம் 2,327 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜூலை 20 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதன்படி பார்த்தால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

குரூப் 2, 2ஏ விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையேதான் தேர்வு எழுத இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிவுறுத்தல்களை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வீடியாவாக வெளியிட்டுள்ளது.

* காலை 8..30 மணிக்கு தேர்வு அறைக்கு தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
* 9 மணிக்கு பிறகு என்ன காரணம் சொன்னாலும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்..
* ஹால் டிக்கெட், பிளாக் பால் பாயிண்ட் பென், ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு ஐடி கார்டு ஆகியவற்றை தேர்வர்கள் கட்டாயம் எடுத்து வரவேண்டும்.

* போன், லேப்டாப்,புத்தங்கள் என வேறு எந்த பொருளும் அனுமதிக்கப்பட மாட்டாது.
* தேர்வர்கள் ஒருவேளை மறந்து கொண்டு வந்தால், அதை வெளியேதான் வைக்க வேண்டும்.
* தொலைந்து போனால் தேர்வு மையம் எந்த பொறுப்பும் ஏற்காது' என்பது போன்ற அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
* இந்த வீடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் https://x.com/TNPSC_Office/status/1829087246982500746 செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+