Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதசம்பளம் ரூ.35,400 டூ ரூ.1.31 லட்சம்! தமிழகத்திலேயே அரசு பணி.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி பயிற்சி அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400 முதல் அதிகபட்சமாக ரூ.1.31 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலை பணியில் அடங்கிய உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்) (Assistant Training Officer Stenography English)மற்றும் தமிழ்நாடு பொது சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Junior Technical Assistant) பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது.

 TNPSC recruitment 2023 for Assistant Training Officer Stenography English and Junior Technical Assistant

உதவி பயிற்சி அலுவலர் பணிக்கு விண்ணப்பம் செய்வோம் குறைந்தபட்சம் 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது ஜூலை மாதம் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். இந்த 2 பணிகளுக்கும் விண்ணப்பம் செய்யும் எஸ்சி, எஸ்டி, மிகவும் பிற்படுத்தபட்டடோர், சீர்மரபினர், கணவரை இழந்த பெண்களுக்கு வயது வரம்பு என்பது கிடையாது.

உதவி பயிற்சி அலுவலர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஆங்கிலத்தில் சீனியர் கிரேட் மற்றும் ஷார்ட்ன்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ பிரிவில் Handloom Technology, Textile Manufacture படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மேலும் உதவி பயிற்சி அலுவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,900, அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 500 வரை சம்பளம் வழங்கப்படும். மாறாக இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும்.

தற்போதைய அறிவிப்பின்படி உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்) பணிக்கு 2 பேர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 5 பேர் என மொத்தம் 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஆகஸ்ட் 21 முதல் 23ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படும்.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் கணினி வழித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். உதவி பயிற்சி அலுவலர் பணிக்கான கணினி வழித்தேர்வு அக்டோபர் மாதம் 5ம் தேதி காலை ம்றறும் மதியம் நடக்கும். இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு அக்டோபர் 6ம் தேதி காலையில் தேர்வு நடக்கும். இந்த தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் விண்ணப்பிப்போருக்கு ஒருமுறை பதிவு கட்டணமாக ரூ.150 உள்ளது. அதன்பிறகு முதல்நிலை தேர்வு கட்டணமாக ரூ.100ம், மெயின் தேர்வுக்கான கட்டணமாக ரூ.200ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த பெண்களுக்கு தேர்வு கட்டணம் என்பது கிடையாது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+