டிகிரி மட்டுமே போதும்.. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் நல்ல வேலைவாய்ப்பு..விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்து 28 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்து அரசு பணியை பெறலாம்.
டிஎன்எஸ்ஆர்எல்எம் (TNSRLM) எனும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (Tamil Nadu State Rural Livelihood Mission Madurai) மாவட்ட வாரியாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில் தான் தென்காசி மாவட்ட டிஎன்எஸ்ஆர்எல்எம் பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி 2 வட்டார இயக்க மேலாளர்கள், 16 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை பொறுத்தமட்டில் செங்கோட்டை, சங்கரன்கோவில் தலா 3 பேர், ஆலங்குலம், கடையம், கீழப்பாவூர், வாசுதேவநல்லூர் பகுதிகளுக்கு தலா 2 பேர், கடையநல்லூர், மேலநீலிதநல்லூர் பகுதிக்கு தலா ஒருவர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

கல்வி தகுதி - வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் எம்எஸ் ஆபிசில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்களின் வயது 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

எழுத்து தேர்வு
விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மூலம் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி ஒப்பந்த் அடிப்படையிலானது தான். முதலில் ஒரு ஆண்டுக்கான பணி ஒப்பந்தம் வழங்கப்படும். அதன்பிறகு பணித்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தொடர்ந்து பணி நீட்டிப்புக்கான ஒப்பந்தகாலம் புதுப்பிக்கப்படும். அரசு விதிகளின் படி சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் ஆப்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்படி விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் இணைத்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், தென்காசி - 627 811 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications