10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை.. கடலூரில் தான் பணியே!
கடலூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து வேலையை பெற முடியும். எழுத்து தேர்வு எதுவும் இல்லாததால் எளிமையாக விண்ணப்பத்தாரர்கள் பணியை பெற வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் என்ஏபிஎஸ்(NAPS) திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் பணிவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் (Tamil Nadu State Transport Corporation or TNSTC) கடலூர் மண்டலத்தில் என்ஏபிஎஸ் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
டிஎன்எஸ்டிசி எனும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது கடலூரில் எலக்ட்ரீசியன் மற்றும் மெக்கானிக் மோட்டார் வாகனம் பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி எலக்ட்ரீசியன் பணிக்கு 10 பேரும், மெக்கானிக் மோட்டார் வாகனம் பணிக்கு 10 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இது அப்ரென்டீஸ் வகை பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொத்தம் 25 மாதம் வேலையில் அமர்த்தப்படுவார்கள். இதில் முதல் 6 மாதம் என்பது அடிப்படை பயிற்சி காலமாகவும், அடுத்த 19 மாதம் பணி பயிற்சி காலமாகவும் இருக்கும். விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் NAPS இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் மற்றும் சான்று சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
எலக்ட்ரீசியன் பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் செய்ய Click Here
மெக்கானிக் பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications