தமிழ்நாடு காவல்துறையில் வேலை.. 3 ஆயிரம் பணியிடங்கள்.. தேதி முடிய போகுது.. மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,359 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (17.09.2023) கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான தேர்வர்கள் மறக்காமல் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது வேலை தேடும் பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாகும். காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தில் இளம் வயதில் இருந்தே இதற்கான உடல் தகுதியை பராமரித்துக் கொண்டு தீவிர பயிற்சியை பல இளைஞர்களும் மேற்கொண்டு வருவதை காண முடியும்.

தமிழக காவல் துறையை பொறுத்தவரை அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில், இரண்டாம் நிலைக் காவலர் , இரண்டாம் நிலை சிறைக் காவலர், மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
காலி பணியிடங்கள்: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/ மாநகர ஆயுதப் படை) -780 பெண்கள்; இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை) 1819 (ஆண்கள்) , சிறை மற்றும் சீர்திருத்த துறையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 83 ஆண்களும் 3 பெண்களும் என மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் பதவிக்கு 674 பேர் நியமிக்கப்படுகிறார்கள். மொத்தமாக 2,576 ஆண்கள், 783 பெண்கள் என மொத்தம் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் 3,359 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது வரம்பு: 1.07.2023 படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 26 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. (வயது உச்ச வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. எனவே பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)
சம்பளம் எவ்வளவு?: இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான ஊதிய விகிதம்: ரூ.18,200- 67,100
விண்ணப்பிப்பது எப்படி?: இணையவழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி 18.08.2023, விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள்; 17.09.2023. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வில் கலந்துகொள்வதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications