தமிழக காவல்துறையில் எஸ்ஐ வேலை.. ரிசல்ட் வெளியீடு! பார்ப்பது எப்படி? ஒரு பணிக்கு எத்தனை பேர் தேர்வு?
சென்னை: எஸ்ஐ காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 1,299 காலிப் பணியிடங்களுக்கு டிசம்பர் 21 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்ற நிலையில் இன்று ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை TNUSRB.TN.GOV.IN -இல் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் காவல்துறையில் காலியாக உள்ள 1,299 காவல் உதவியாளர் (எஸ்.ஐ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதினர்.

தேர்வர்கள் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை TNUSRB.TN.GOV.IN -இல் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம். ஒரு காலிப்பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 7,414 பேர் உடல் தகுதி தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பிப்ரவரி 24 - மார்ச் 2 வரை உடல் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு அடிப்படையில் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்படுவார்கள். அதவாது நேர்முகத்தேர்வு நடைபெறும். இதற்கு 10 மார்க் வழங்கப்படும்.
இந்த மூன்று கட்ட தேர்வுகளுக்கு பிறகு இறுதி மெரிட் லிஸ்ட் வெளியாகும். அதன்பிறகு மெடிக்கல் சான்றிதழ் பரிசோதனைக்கு பிறகு எஸ்.ஐ பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்.
இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகி, பல்வேறு நகரங்களிலும் உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில்தான், எஸ்.ஐ தேர்வர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications