டிஎன்பிஎஸ்சி குரூப் 4! பாஸ் செய்துவிட்டீர்களா? சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாள்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாள் (நவ.21) என்பதால் தேர்வர்கள் யாரும் இன்று அப்லோடு செய்ய மறந்துவிடாதீர்கள் என வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு அரசு பணிகளுக்கு தேர்வுகளை நடத்தி ஆட்களை பணியமர்த்தி வருகிறது. உதவியாளர் பணி முதல் குரூப் 1 அதிகாரி வரை தேர்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது. இதில் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வில் கிராம நிர்வாக அலுவவர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வில் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து அவர்களில் 15.8 லட்சம் பேர் எழுதினர். இதனிடையே குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
அதன்படி 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டது. இதன் மூலம் குரூப் 4 தேர்வில் மொத்தம் 6,724 காலிப்பணியிடங்களாக உயர்ந்தன. மேலும் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 9,491 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் குரூப் 2, 2ஏ தேர்வுகளிலும் பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. இந்த நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவம்பர் 21 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது. இன்று மாலை வரை நேரம் இருக்கிறது என்பதற்காக காத்திருக்காமல் உடனே பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் கடைசி நிமிடத்தில் சர்வர் பிரச்சினை உள்ளிட்டவைகளில் இருந்து தப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications