டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு.. 105 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு-2 நேரடி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி வௌியிட்டிருந்தது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் மேலாளர், துணை மேலாளர், உதவி பொது மேலாளர், கணக்கு அலுவலர், கால்நடை உதவி டாக்டர் ஆகிய பதவிகளில் 105 காலிப்பணியிடங்களுக்கு விண்ப்பிக்க இன்று தான் கடைசி நாள் ஆகும். தகுதி உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான போட்டித் தேர்வு வருகிற நவம்பர் மாதம் 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய நிலையில், தகுதியுடையோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில், திருத்தங்கள் மேற்கொள்ள தேர்வர்களுக்கு அக்டோபர் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரையில் அவகாசம் வழங்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது,

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி அறிவிப்பானை முழு விவரம்: டிஎன்பிஎஸ்சி 105 இடங்கள் உள்ள புதிதாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (நேர்முகத் தேர்வு கொண்ட பணிக்கான)தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
மொத்த காலிபணியிடங்கள்: 105
வேலை வகை: அரசு வேலை
வேலை தரும் நிறுவனம்: தமிழ்நாடு அரசு
கல்வி தகுதி: பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் அல்லது எம்பிஏ மற்றும் அனுபவம் (கல்வி தகுதியை பொறுத்தவரை ஒவ்வொரு பணிக்கும் ஒரு தகுதிகள் உள்ளது)
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வுகள் இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் கட்டாய தமிழ் தகுதித் தேர்வு ஆகும். பொது அறிவு, மனத் திறன் அறிவு குறித்த வினாக்கள் இடம் பெறும். இரண்டாம் தாளில், பாடம் தொடர்பான வினாக்கள் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு பின்னர் பணி வழங்கப்படும்.
தேர்வு கட்டணம் எவ்வளவு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வுக்கான கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதிதான் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். அதாவது சனிக்கிழமையான இன்றைக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அக்டோபர் 2 முதல் 4 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களை www.tnpsc.gov.in தளத்தில் அறியலாம்,.












Click it and Unblock the Notifications