தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் ஆசிரியர் ஆக ஆசையா.. 75000 சம்பளம்.. மாலை 5 மணி வரை தான் டைம்!
சென்னை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 20ம் தேதியான இன்று தான் கடைசி நாள் ஆகும்..எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்..எப்படி விண்ணப்பிப்பது, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பணிக்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு ரூ.75,900 வரை சம்பளம் கிடைக்கும்.. இதற்கான தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் உடனே விண்ணப்பம் செய்ய வேண்டிது அவசியம் ஆகும்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை, சிறப்பு ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், வேளாண் பயிற்றுநர்கள், தொகுதி கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பணியிடங்களை ஆண்டு தோறும் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் காலிபணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் (Secondary Grade Teacher) பணியிடங்ளை நேரடியாக நிரப்பப்படுகிறது. இதில் 1,729 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 39 பணியிடங்கள் Backlog முறையில் வைக்கப்பட்டிருக்கிறது
துறை வாரிய காலிபணியிடங்கள்:
தமிழ் - 1388
தெலுங்கு - 75
உருது - 35
கன்னடம் - 2
சென்னை மாநகராட்சி பள்ளிகள்: தமிழ் - 20, சிறுபான்மை மொழி உருது - 1
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் - 139
பழங்குடியினர் நலப் பள்ளிகள் - 22
மாற்றுத்திறனாளிகள் நலப் பள்ளிகள் - 29
கள்ளர் நலப் பள்ளிகள் - 18
கல்வி தகுதி: போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதியை பொறுத்தவரை 12ம் வகுப்பு முடித்து D.El.Ed, D.Ed, B.El.Ed படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் என்றால் மாதம் ரூ.75,600 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: 53 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிகளின் படி வயது சலுகை வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தாரர்களின் வயது என்பது 01.07.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். அதேநேரம் பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.சி.ஏ மற்றும் எஸ்.டி பிரிவினர் 58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் இன்று (மார்ச் 20) மாலை 5 மணிக்குள் https://www.trb.tn.gov.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிடபிள்யூடி பிரிவினர் என்றால் ரூ.300 விண்ணப்ப கட்டணம் ஆகும்.
தேர்வு முறை: தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, நேர்க்காணல் ஆகிய அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் . OMR Based தேர்வானது வரும் ஜுன் மாதம் 23ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications