TRB.. புதுசா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. பட்டதாரி ஆசிரியர்களே இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7-ந் தேதி வரை அவகாசம் நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள், வருகிற டிசம்பர் மாதம் 8 மற்றும் 9-ந் தேதிகளில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறியிருந்ததாவது: "தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு வருகிற ஜனவரி மாதம் 7-ம் தேதி நடக்கிறது.

இந்த தேர்வில் பங்கேற்க வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் https://www.trb.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30-ந்தேதி ஆகும். தமிழுக்கு 371 காலி பணியிடங்களும், ஆங்கிலத்துக்கு 214 பணியிடங்களும், கணிதத்துக்கு 200 பணியிடங்களும், இயற்பியலுக்கு 274 பணியிடங்களும், வேதியியலுக்கு 273 பணியிடங்களும், வரலாறுக்கு 346 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி இருக்க வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது..
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் எவ்வளவு: 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் குறித்தும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.36400-115700 (லெவல் 16) சம்பளம் கிடைக்கும் .
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான தேதி: 25.10.2023
பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2023க்கு என்று முதல் விண்ணப்பிக்கலாம்: 01.11.2023
கல்வி தகுதி: பட்டம் மற்றும் பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2023க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2023 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசத்தை டிசம்பர் 7-ந் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2023 (ஓஎம்ஆர் அடிப்படையில் தேர்வு) நடைபெறும் நாள்: 07.04.2024
பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2023 காலியிடங்கள் விவரம்: 2222
பள்ளி கல்வித்துறையில் காலியிடங்கள்: 2171 (இதில் 171 எஸ்டி பணியிடங்கள்)
பிற்பற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் உள்ள காலியிடங்கள்: 23
ஆதிதிராவிடர் நலத்துறை காலியிடங்கள்: 16
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை காலியிடங்கள்: 12
தமிழ் மீடியத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது பட்டம் அல்லது முதுகலை பட்டம் வரை எதுவரை தமிழ் வழியில் படித்துள்ளார்களோ அதனை குறிப்பிட்டு சான்றிதழ் பெற வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள 2222 இடங்களில் 20 சதவீதம், அதாவது 444 இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும்.
பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2023க்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு ஏன்: பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கையை ஏற்று, பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய பயிற்றுனர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற டிசம்பர் மாதம் 7-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு பிறப்பித்திருக்கிறதுது. ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள், வருகிற டிசம்பர் மாதம் 8 மற்றும் 9-ந் தேதிகளில் திருத்தம் மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications