திருச்சியில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. எக்ஸாம் கிடையாது.. மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம்!
சென்னை: திருச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 73 டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு துறை சார்ந்த ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு எதுவும் கிடையாது. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது உள்ள இதர விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
திருச்சியில் ஆயுத தொழிற்சாலை அமைந்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது ஆகும். கடந்த 1967 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

திருச்சியில் உள்ள இந்த நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படுகின்றன. ஒப்பந்த அடிப்படையிலும் சில பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது 73 டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. டர்னர் - 06
2. ஃபிட்டர் (எலெக்ட்ரானிக்ஸ்) - 06
3. கிரைண்டர் - 08
4. மெஷினிஸ்ட் - 24
5. பெயிண்டர் - 03
6. வெல்டர் - 03
7. கேமிக்கல் பிராசஸ் தொழிலாளி - 03
8. எலெக்ட்ரோபிளேட்டர் - 03
9. எக்ஸாமினர் - 08
10. OMHE - 01
11. மில்ரைட் - 02
12. எலெக்ட்ரீஷியன் - 04
13. ஃபிட்டர் (ஜி) - 01
14. ஃபிட்டர் (குளிர்சாதன வசதி) - 01
கல்வித் தகுதி:
துறை சார்ந்த ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது உச்சவரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின் படியும் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு:
ரூ.19,900 + அகவிலைப்படி என சேர்த்து தோராயமாக ரூ.30,845 கிடைக்கும். இது ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.
தேர்வு முறை:
ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்கள் மட்டும் இன்றி, செயல்முறை தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.aweil.in/notice
என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief General Manager,
Ordnance Factory Tiruchirappalli,
Tamil Nadu - 620016.
விண்ணப்பிக்க வரும் 21.09.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://oftftr.in.net/application.php
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications