மிஸ் பண்ணாதீங்க.. மாதஊதியம் ரூ.30,000 டூ ரூ.70,000.. திருச்சி ஐஐஎம்-மில் சூப்பர் வேலை! நல்ல வாய்ப்பு
திருச்சி: திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருச்சியில் ஐஐஎம் எனும் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் செயல்பட்டு வருகிறது. இங்கு காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

ஐடி சப்போர்ட் என்ஜினியர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஇ, பிடெக் பிரிவில் இசிஇ, சிஎஸ்இ, ஐடி முடித்திருக்க வேண்டும். மேலும் எம்எஸ்சி, பிஎஸ்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்சிஏ, பிசிஏ முடித்து 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
ஜூனியர் ப்ரோகிராமர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஇ, பிடெக் பிரிவில் ஐடி, சிஎஸ்இ, இசிஇ, எலக்ட்ரானிக்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் எம்எஸ்சி, பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி படித்தவர்களுக்கும் பிசிஏ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். விண்ணப்பத்தாரர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஹிந்தி சூப்பர்வைசர்: இந்த பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிப்ளமோ, டிகிரி, மாஸ்டர் டிகிரியில் ஹிந்தி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு மாதசம்பளமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
லைப்ரேரி இன்பர்மேஷன் அசிஸ்டென்ட்: இந்த பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருப்பதோடு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் தற்காலிகமானது தான். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் முதல் 2 ஆண்டு பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்களின் செயல்பாட்டை பொறுப்பு பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 21ம் தேதிக்குள் iimtrichy.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
