நல்ல சம்பளம்.. திருச்சியில் வேலை வேண்டுமா? தேசிய வாழை ஆராய்ச்சி மையம் முக்கிய அறிவிப்பு!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த செய்தியை படித்து விண்ணப்பம் செய்து பணியை பெறலாம்.
திருச்சி மாவட்டம் தாயனூர் தாலுகா தோகமலை ரோட்டில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (National Research Centre for Banana) செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் வாழை உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.

இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவுப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice பணிக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு பிஎஸ்சி (தாவரவியல்) படித்த 5 பேர், பிஎஸ்சி (பயோ டெக்னாலஜி) படித்த 5 பேர், பிஎஸ்சி (புட் ப்ராசசிங் & ப்ரிவென்சன்) படித்த 4 பேர், பிசிஏ படித்த 2 பேர் என மொத்தம் 16 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: அதேபோல் டிப்ளமோ (டெக்னீஷியன்) அப்ரன்டீஸ் பணிக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி வாரியாக பார்த்தால் டிப்ளமோ (அக்ரிகல்சர்/ஹார்ட்டிகல்சர்) பணிக்கு 7 பேர், டிப்ளமோ (நர்சரி மேனேஜ்மென்ட் அன்ட் ஆர்னமென்டல் கார்டனிங்) படித்த 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாதசம்பளம்: கிராசூவேட் அப்ரென்டீஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படு்ம. டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரென்டீஸ் பணிக்கு மாதசம்பளமாக ரூ.8 ஆயிரம் வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.mhrdnats.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து அதன்பிறகு ஸ்டெப் 2வில் ICAR - National Research Centre For Banana Authority மூலம் டிசம்பர் மாதம் 13ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மெரிட் லிஸ்ட் மற்றும் சான்று சரிபார்ப்பு ஆகிவயற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இது ஒரு தற்காலிக பணியாகும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications