தேனி மாவட்ட மக்களுக்கு ஒரே நாளில் இரண்டு குட்நியூஸ்.. இந்த சனிக்கிழமையை மிஸ் பண்ணிடாதீங்க
தேனி: தேனி மாவட்ட மக்களுக்கு இரண்டு குட்நியூஸ் காத்திருக்கிறது. அந்த இரண்டு நல்ல விஷயம் ஒரே நாளில் நடைபெற உள்ளது. தேனியில் மகளிர் தொழில்முனைவோர் முகாம் சனிக்கிழமை நடக்கிறது. இதேபோல் சனிக்கிழமை அன்றே தேனி மாவட்ட நிரவாகம் சார்பில் ஆண்டிப்பட்டியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று இதுபற்றி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான 'வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது' ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. தேனி மாவட்டத்தில் இத்திட்டமானது 2 வட்டாரங்களில் 30 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில் நிறுவன வளர்ச்சியின் அளவு பெரிதாக, தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்த இன்னும் பல சிறப்பான சேவைகள் தொழில் முனைவோருக்கு தேவைப்படுகிறது. உதாரணமாக மார்க்கெட்டிங், பிராண்டிங், சந்தை இணைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தர நிலைப்படுத்துதல், தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல், தொழில்சார்ந்த புதுமை யுக்திகள், நிதி சேவைகள் போன்ற சேவைகள் தேவைப்படுகிறது.
மாவட்டத்தில் இயங்கி வரும் மகளிர் தொழில் முனைவோர் தங்களது தொழில்களில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உயர்தர சேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற, தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேனியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உழவர் பயிற்சி மையத்தில் நடக்கிறது.
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் நடக்கும் இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் மகளிர் தொழில்முனைவோர் தங்களின் பெயர்களை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலரை 9385299717 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனிடையே தேனிமாவட்டம் நிர்வாகம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், "தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆண்டிப்பட்டி பாரத் நிகேதன் என்ஜினீயரிங் கல்லூரியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ., நர்சிங் மற்றும் இதர கல்வித் தகுதியுடையவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க வரும்போது, தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca-login என்ற இணையதள இணைப்பில் தங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்." இவ்வாறு கூறப்பட்டள்ளது.












Click it and Unblock the Notifications