வங்கியில் வேலை.. மாதம் 85 ஆயிரம் சம்பளம்.. பட்டப்படிப்பு போதும்.. விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யுகோ வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 250 லோக்கல் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 85 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யுகோ வங்கி. 1943 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் இந்த வங்கிக்கு உள்ளன. பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம் + சலுகைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் தான் தற்போது யுகோ வங்கியில் காலியாக உள்ள லோக்கல் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: 250 லோக்கல் ஆபிசர் பணியிடங்கள் உள்ளன. மாநில வாரியாக பார்த்தால் குஜராத்: 57(பணியிடங்கள்), மகாராஷ்டிரா: 70, அசாம்: 30 , கர்நாடகா: 35, திரிபுரா: 13, சிக்கிம்: 6, நாகாலாந்து: 5 , மேகாலயா: 4 , கேரளா: 15, தெலுங்கானா & ஆந்திரா: 10, ஜம்மு காஷ்மீர்: 5 ஆகிய மாநிலங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும். உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். அதாவது கேரளாவில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தால் மலையாளம் தெரிந்து இருப்பது அவசியம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது வரம்பில் தளர்வுக்ள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ. 48,480 - 85,920/-வரை சம்பளம் அளிக்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் டெஸ்ட், உள்ளூர் மொழித்தேர்வு/ நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யபடுவார்கள். தேர்வுகள் தமிழகத்திலும் நடைபெறும். கோவை, சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்காலம். தேர்வுக் கட்டணமாக ரூ 850 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் ரூ.175 செலுத்தினால் போதும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 16.01.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்; 05.02.2025 ஆகும்.
தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ucobank.com/documents/20120/458985/Advertisement+LBO_English.pdf/4b772c19-450f-ece3-5926-d2123e795d8c?t=1736958584378
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications