பல ஆயிரம் ரூபாய்.. வங்கி கணக்கில் வரப்போகுது.. மத்திய அரசு தரப்போகும் அகவிலைப்படி அரியர்.. எப்போது?
சென்னை: கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட, 18 மாத அகவிலைப்படி/அகவிலை நிவாரண (DA/DR) நிலுவைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
DA நிலுவைத் தொகை தொடர்பான விவாதம்
தேசிய கவுன்சிலின் (கூட்டு ஆலோசனை பொறிமுறை) நிலைக்குழுவின் 63-வது கூட்டம் டெல்லியில் உள்ள சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊழியர்களின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத DA மற்றும் DR நிலுவைத் தொகையை வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், அரசு துறையின் பல செயலாளர்கள் தலைமையேற்றனர். சிவகோபால் மிஸ்ரா மற்றும் எம். ராகவய்யா போன்ற மூத்த தலைவர்கள் ஊழியர்களின் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். மார்ச் 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத DA/DR தொகையை வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஊரடங்கு காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்.
இருப்பினும், மத்திய நிதி அமைச்சகம் இவர்களுக்கு சம்பள யுயர்வு வழங்கப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்தது. 2020-21 நிதியாண்டுக்கு அப்பாலும், அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்கான சுமை அதிகரித்தது. எனவே, DA / DR நிலுவைத் தொகையை வழங்குவது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் நேற்று இந்த அரியர்ஸ் தொகை குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டன.
எட்டாவது ஊதியக் குழுவின் உருவாக்கம் மற்றும் DA நிலுவைத் தொகை
இக்கூட்டத்தில் எட்டாவது மத்திய ஊதியக் குழுவை அமைப்பது மற்றும் அதன் அதிகார வரம்பு குறித்து விவாதிக்கப்பட்டது. ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தினர். அதிகார வரம்புகளை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்..
ஜனவரி 1, 2026 முதல் எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமதம் ஏற்பட்டால், நிலுவையுடன் பணம் வழங்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான குழு காப்பீட்டு திட்டம் (CGEGIS) தொடர்பான புதிய முன்மொழிவு தயாரிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்ட போதிலும், 18 மாத DA / DR நிலுவைத் தொகை குறித்த கவலை ஊழியர்களிடையே இன்னமும் உள்ளது. அரசு, மனிதாபிமான அணுகுமுறையைப் பின்பற்றி, ஊழியர்களின் நியாயமான தொகையை வழங்க வேண்டும் என ஊழியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
விரைவில் 18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தொகையை மத்திய அரசு ஒதுக்க உள்ளதாக கூறப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வரவில்லை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் இந்த அரியர் இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது .
சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இதனால் நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான 18 மாத நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து சாதகமான முடிவை அரசு எடுக்கும் என ஊழியர்கள் நம்புகின்றனர். ஊழியர்கள் தாங்கள் கோரிய DA நிலுவைத் தொகை கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர். அரசு, ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் நல்ல முடிவெடுக்கும் என நம்புகின்றனர்.
பல விஷயங்கள் விவாதிக்கப்பட்ட போதிலும், ஊழியர்கள் தங்களது DA நிலுவைத் தொகை கிடைக்குமா என்று காத்திருக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications