எதிர்பார்க்காத முடிவு! அடுத்த வாரமே உயருகிறது அகவிலைப்படி.. வருகிறது அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: அகவிலைப்படி (டிஏ) கணிசமான அளவு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடுத்த வாரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி DA இல் 4% உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரடி பலனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 8வது ஊதியக் குழுவை அமைக்காதது பலருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில்தான் அரசு ஊழியர்களின் கோபத்தை போக்கும் விதமாக விரைவில் டிஏ உயர்வு அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அகவிலைப்படி நிலுவை தொகையான 18 மாத தொகை வழங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் பிடிக்கப்பட்ட தொகை ஆகும் இது. இந்த தொகை கொரோனா காலத்தில் கொடுக்கப்படவில்லை. இதைத்தான் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த கோரிக்கை இந்த முறை நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை. இருப்பினும் வரவிருக்கும் DA உயர்வை எதிர்பார்த்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். டிஏ அதிகரிப்பு, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நல்வாழ்வை மேலும் மேம்படுத்தும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பள உயர்வைக் கொண்டு வர உள்ளது.
DA அதிகரிப்புக்கான தேதியை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், செப்டம்பர் கடைசி வாரத்தில் அந்த அறிவிப்பு வரலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. DA 4% உயர்ந்தால், அது 54% ஆக அதிகரிக்கும் , இது தற்போதைய 50% இல் இருந்து குறிப்பிடத்தக்க உயர்வு ஆகும், இது மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு பயனளிக்கும்.
தற்போது, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் ஆண்டுக்கு இரண்டு முறை DA திருத்தம் செய்யப்படுகிறது, DA விகிதங்கள் பொதுவாக ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 அன்று அமலுக்கு வரும். DA உயர்வு இப்போது நடந்தால், அது ஜூலை 1, 2024 முதல் கணக்கில் எடுக்கப்படும். கடைசி DA திருத்தம் மார்ச் மாதம் செயல்படுத்தப்பட்டது, ஜனவரி 1, 2024 முதல் அது கணக்கில் கொள்ளப்பட்டது.
பென்சன்: இது போக ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த பென்சன் திட்டத்திற்கு கீழ் பென்சன் மட்டுமன்றி அகவிலைப்படியும் சேர்ந்து வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு: இப்போது ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் 50 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பென்ஷனாக வழங்கப்படும். ஆனால் அது மட்டுமல்ல.. கூடுதலாக.. பென்சனுடன் கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படும். அதாவது தற்போது உள்ள 50% அகவிலைப்படி என்பது அடிப்படை ஊதியத்தில் பாதி ஆகும். அதாவது 25 ஆயிரம்.
எனவே மொத்தமாக 50 ஆயிரம் ரூபாய் மொத்தமாக அரசு ஊழியருக்கு பென்ஷனாக வழங்கப்படும். இதை அடிப்படையாக வைத்து மற்ற வருமானத்திற்கு கணக்கிடலாம்.
இப்போது உள்ள முறை என்ன? : நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். அதை மத்திய அரசு பல இடங்களில் முதலீடு செய்யும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications